Wednesday, December 24, 2014

ரூ.500,1000 நோட்டுகளை மாற்ற அவகாசம் நீட்டிப்பு

புதுடில்லி:ரூ.500,ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் வசதியை மேலும் ஆறு மாத காலத்திற்கு நீடித்துள்ளது ரிசர்வ் வங்கி.
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டு்ள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டு இருப்பதாவது:
கடந்த 2005ம் ஆண்டுக்கு முன், ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்ட ரூபாய் நோட்டுகளில், ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்காது. 2005க்கு பின் வெளியான நோட்டுகளில் தான், எந்த ஆண்டில் அந்த நோட்டு தயாரிக்கப்பட்டது என்பது, தனியாக குறிக்கப்பட்டிருக்கும்.2005ம் ஆண்டுக்கு முன் அச்சடிக்கப்பட்ட, 500, 1,000 ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்கள் வெகுகுறைவாக இருப்பதால்,அந்த நோட்டுகளை மாற்ற, ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.
பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடுவை, ஜன., 1 வரை, ரிசர்வ் வங்கி நீட்டித்தது. இதுவரை, 53 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 147 கோடி ரூபாய் மதிப்பிலான, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டு உள்ளன.
இந்நிலையில் மேலும் ஆறுமாதம் காலஅவகாசம் அதாவது ஜூன் மாதம் 2015-ம் ஆண்டு வரையில் கால அவகாசம் அளித்துள்ளது.

‘Not responsible for hoax calls’


The examination section of the Maharashtra University of Health Sciences (MUHS) has been forced to come out with a notice denying responsibility of calls allegedly received by students where they were informed of their failure in the exams even before the results were declared. The university has clarified that the dual assessment system it follows is fool proof and it is impossible for anyone to know the marks achieved by the students before the marksheets are prepared.

According to a university official, there have been instances of people claiming to have contacts in the university and examination section calling up students and telling them of the marks they have got in the subjects they appeared for. The official said, “Under no circumstances will the university officials or employees of the examination section will contact the students or principals of the respective colleges with regards to exam results. The question of people claiming to have contacts in the university were spurious and students falling prey to their assurances were solely responsible for the same,” said the official.

Dr K.D. Chavan, Controller of Examination (CoE), MUHS, said, “The receiver of the call should immediately lodge a complaint with the police and update the university of the same along with the number from which they received the call. Action will be initiated against the perpetrator immediately,” he said .

Recently, the university has been receiving numerous complaints from students who get fleeced as the caller provides confidential information of the student giving them the impression that the caller is legitimate.

The university has been trying to get to the root of the problem and is trying to ascertain as to where the information is being leaked from. Till then the university has warned students to be wary and not get duped, as the university will not be responsible.

14 injured as Singapore Airlines flight from Osaka hit by turbulence

The Financial Express

Fourteen people on board a Singapore Airlines (SIA) flight from Osaka were injured after the plane carrying 268 passengers was today hit by a sudden severe turbulence about an hour before landing here.

The captain of the SIA flight SQ615, which departed last night from Osaka at 11.30 pm local time, reported the turbulence an hour before landing at Changi Airport early this morning, a SIA spokesman said.

The flight had 268 passengers, including two infants, and 13 crew members on board.

Most of the injured passengers and crew members received head and neck injuries.

Medical personnel, airline staff, as well as staff of ground services provider were on standby to help the passengers when the aircraft arrived at 5.17 am, the spokesman said.

The injured were assessed by a doctor and taken to the terminal transit clinic.

All the injured passengers were discharged after treatment, except for one patient, who was referred to a hospital for further examination due to a previous neck injury.

Bill in LS to merge PIO, OCI schemes Press Trust of India | New Delhi December 23, 2014

A bill to facilitate merger of the Person of Indian Origin (PIO) and Overseas Citizenship of India (OCI) schemes by amending the Citizenship Act was today introduced in Lok Sabha on the last day of the Winter Session.

The Citizenship (Amendment) Bill 2014, introduced by Minister of State for Home Haribhai P Chaudhary, seeks to remove certain lacunae noticed during implementation of the 1955 Act and review of provisions relating to overseas citizens of India.

The amendment also provides for registration of OCI cardholders, confirmation of rights of such cardholders, renunciation of OCI card and cancellation of registration of OCI card, the Statement of Objects and Reasons of the bill said.

During his recent visits to the US and Australia, Prime Minister Narendra Modi had announced a two-month deadline for the long-pending merger of OCI and PIO status to woo the Indian diaspora from whom he sought support for his ambitious Clean India campaign.

He had then said the Home Ministry was working on the new programme that will merge PIO and OCI schemes.

முடிவுக்கு வந்தது கே.பி. எனும் சகாப்தம்



ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாகேஷ், பிரகாஷ்ராஜ், விவேக் என இயக்குநர் கே.பாலசந்தர் அறிமுகப்படுத்தி உச்சத்தைத் தொட்ட நட்சத்திரங்கள் 66 பேர். பெண்ணுரிமை பேசும் நாயகிகளையும், உறவுகளின் விநோதங்களையும் காட்சிப்படுத்தியதன் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்தவர்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி உச்சத்திலிருந்த காலத்திலும், ரஜினி, கமல் உச்சத்தைத் தொட்ட பிறகும் அவர்களை நம்பாமல் கதைகளை நம்பி வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் இவர்.

நாடகங்களை இயக்கியவர்: கைலாசம் பாலசந்தர் என்ற இயற்பெயர் கொண்ட பாலசந்தர், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்துக்கு உள்பட்ட நல்லமாங்குடி கிராமத்தில் 1930-ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி பிறந்தார்.

கே.பாலசந்தரின் கலையுலகப் பிரவேசம் அந்த கிராமத்தின் திண்ணை நாடகங்களில்தான் ஆரம்பமானது. கிராம நிர்வாக அதிகாரியாக இருந்த அவரது தந்தைக்கு பாலசந்தரை மாவட்ட ஆட்சியராக ஆக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால் இவரோ வீட்டுத் திண்ணையில் பள்ளிப் பருவத்திலேயே நாடகங்களை அரங்கேற்ற ஆரம்பித்தார்.

தந்தையின் வேண்டுகோளை ஏற்று பி.எஸ்.சி படிப்பை முடித்த பாலசந்தர் முத்துப்பேட்டையில் பள்ளி ஆசிரியராக ஓர் ஆண்டு பணியாற்றினார். அதன்பிறகு, சென்னை தேனாம்பேட்டையில் இருந்த ஏ.ஜி.எஸ். அலுவலகத்தில் கணக்கராகப் பணிக்குச் சேர்ந்தார். அலுவலகப் பணிபோக மீத நேரங்களில் நாடகங்கள் மீது கவனம் செலுத்தினார். பின்னர் "ராகினி ரிக்ரியேஷன்ஸ்' என்ற பெயரில் சென்னை, திருவல்லிக்கேணியில் நாடகக் குழுவைத் தொடங்கினார்.

அப்போது பாலசந்தரின் கதை, வசனம், இயக்கத்தில் அரங்கேறிய "மேஜர் சந்திரகாந்த்' நாடகம் மிகப் பிரபலமான நாடகமாக உருப்பெற்றது.

அதைத் தொடர்ந்து, அவர் அரங்கேற்றிய "எதிர்நீச்சல்', "நாணல்', "விநோத ஒப்பந்தம்' போன்ற நாடகங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இந்த நாடகங்களின் மூலம் நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட நடிகர்கள் வெளியுலகுக்கு தெரிய ஆரம்பித்தனர்.

எம்.ஜி.ஆர். நடித்த "தெய்வத்தாய்' படத்தின் மூலம் மேடை நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தார் பாலசந்தர். அப்படத்தின் கதை, வசனத்தை எழுதியதன் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதைத் தொடர்ந்து, "பூஜைக்கு வந்த மலரே' ஏவி.எம்.மின் "சர்வர் சுந்தரம்', சிவாஜிகணேசன் நடித்த "நீலவானம்' ஆகிய படங்களுக்குக் கதை, வசனம் எழுதினார்.

1965-ஆம் ஆண்டு வெளியான "நீர்க்குமிழி' இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம். இந்தப் படத்தில் நாகேஷ் கதாநாயகனாக நடித்தார். முத்துராமன், கே.ஆர்.விஜயா நடித்து வெளிவந்த "நாணல்', நாகேஷ், ஜெயலலிதா நடித்த "மேஜர் சந்திரகாந்த்' ஆகிய இரு படங்களும் பாலசந்தருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. "மேஜர் சந்திரகாந்த்' படத்தின் மூலம் வெகுவாக அறியப்பட்ட சுந்தர்ராஜன் அப்படத்துக்குப் பின் மேஜர் சுந்தர்ராஜன் என்றழைக்கப்பட்டார்.

இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவுகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூக பிரச்னைகள் போன்றவை முக்கியக் கருப்பொருள்களாய் இருந்தன. நாகேஷ், முத்துராமன் நடிப்பில் வந்த "எதிர்நீச்சல்', ஜெமினி நடிப்பில் வெளிவந்த "இருகோடுகள்', முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவான "பாமா விஜயம்', காந்தியக் கொள்கைகளின்படி வாழ முடியுமா என்பதைக் கருவாகக் கொண்டு உருவான "புன்னகை', கமல், ஷோபா, சரத்பாபு, சுமித்ரா நடிப்பில் வெளிவந்த "நிழல் நிஜமாகிறது', கமல், ஸ்ரீவித்யா, ஜெயசுதா நடித்த "அபூர்வ ராகங்கள்' என இவரின் தொடக்க கால படங்கள் சிறந்த கதை அம்சமுள்ள படங்களாகத் தமிழ் சினிமாவில் தனி பாதை அமைத்தன. 1975-ஆம் ஆண்டு வெளிவந்த "அபூர்வ ராகங்கள்' படத்தின் முலம் நடிகர் ரஜினிகாந்த் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

சிவாஜியை வைத்து பாலசந்தர் இயக்கிய ஒரே படம் "எதிரொலி'. கமல், பிரமீளா நடிப்பில் வெளிவந்த "அரங்கேற்றம்' அந்தக் காலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுஜாதா கதாநாயகியாக அறிமுகமான "அவள் ஒரு தொடர்கதை', ரஜினிகாந்த், சரிதா நடித்த "தப்பு தாளங்கள்', மாதவி நடித்த "இவள் ஒரு கண்ணகி' உள்ளிட்ட படங்கள் சமூக பிரச்னைகளை மையமாகக் கொண்டு உருவாகின.

"அவள் ஒரு தொடர்கதை', "தில்லுமுல்லு', "நினைத்தாலே இனிக்கும்', "வறுமையின் நிறம் சிகப்பு', "உன்னால் முடியும் தம்பி', "சிந்து பைரவி', "புது புது அர்த்தங்கள்', "வானமே எல்லை' போன்ற ஏராளமான சிறந்த படங்களை இவர் இயக்கியுள்ளார்.

தெலுங்கில் கமல், சரிதா அறிமுகமான "மரோ சரித்ரா' திரைப்பட வரலாற்றில் கலைரீதியாகவும் வணிகரீதியாகவும் பெரும் சாதனை படைத்தது. பின்னர், இதே படம் கமல், ரதி நடிக்க கே.பி. இயக்கத்தில் "ஏக் தூஜே கேலியே' என்ற பெயரில் ஹிந்தியில் வெளியாகி மாபெரும் சரித்திரம் படைத்தது.

90-களுக்குப் பிறகு "கையளவு மனசு' போன்ற பெரும் வரவேற்பைப் பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார். தமிழ் சின்னத்திரையில் மெகா தொடர்களுக்கு முன்னோடி என்ற பெருமையும் பாலசந்தரை சாரும்.

கவிதாலயா என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, அதன் மூலமாக பிற இயக்குநர்களின் கைவண்ணத்தில் பல திரைப்படங்களை அளித்துள்ளார்.

மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.வி.சேகர், மௌலி, ஒய்.ஜி.மகேந்திரன், காத்தாடி ராமமூர்த்தி ஆகியோர் நாடக மேடையிலிருந்து இவரால் திரையுலகம் கண்டவர்கள்.

தமது இயக்கத்தில் பாலசந்தர் அதிகமாக பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினிகணேசன், நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், கமல்ஹாசன், முத்துராமன் நடிகையரில் சௌகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.

வெற்றி, தோல்வி ஆகிய இரு துருவங்களையும் ஒரே நேரத்தில் தமது திரையுலக வாழ்வில் பாலசந்தர் அனுபவித்தது உண்டு. இவர் முதன் முதலில் இயக்கிய வண்ணப் படமான "நான்கு சுவர்கள்' தோல்வி அடைந்தது. அதே கால கட்டத்தில் அவரது "நூற்றுக்கு நூறு' வெளியாகி பெரும் பாராட்டையும் வெற்றியையும் பெற்றது.

"தண்ணீர் தண்ணீர்', "அச்சமில்லை அச்சமில்லை', ஆகிய படங்கள் அரசியல், சமூக நெருக்கடிகளைப் பேசிய படங்களாக அமைந்தன. "தண்ணீர் தண்ணீர்' கோமல் சுவாமிநாதனின் நாடகத்திலிருந்து உருவானது.

"அவர்கள்', "புன்னகை மன்னன்', "தில்லு முல்லு', "அவள் ஒரு தொடர்கதை', "அபூர்வ ராகங்கள்' உள்பட இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி சாதனை புரிந்துள்ளார். கடைசியாக இவரது இயக்கத்தில் வெளிவந்த படம் "பொய்'. கமல் நடிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கி வரும் "உத்தம வில்லன்' படத்தில் நடித்து வந்தார் பாலசந்தர். இந்தப் படத்தில் திரைப்பட இயக்குநராகவே அவருக்கு வேடமளித்தார் கமல்ஹாசன். இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இயக்குநர் சிகரம் கே.பி!



அனைவராலும் ‘கே.பி’ என்று அன்போடு அழைக்கப்பட்ட கே.பாலசந்தர், மறைந்துவிட்டார். அவர் மறைந்தாலும் தமிழ் சினிமா உள்ளவரை பேசக்கூடிய அளவுக்கு பல சாதனைகளைச் சேர்த்துவைத்துவிட்டுச் சென்றுள்ளார்!

அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் நன்னிலம் கிராமத்தில் பிறந்தவர் பாலசந்தர். சிறுவயதிலேயே மேடை நாடகங்கள் எழுதுவதில் ஆர்வமாக இருந்தார். தன் 15-ம் வயதில் சில நாடகங்களை எழுதியும் இருக்கிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் படிப்பில் சேர்ந்து படித்தவர், தொடர்ந்து மேடை நாடகக் கலையுடன் தொடர்பிலேயே இருந்தார்.



கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, திருவாரூர் அருகே உள்ள முத்துப்பேட்டையில் பள்ளி ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். பிறகு சென்னைக்கு வந்து, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிக்குச் சேர்ந்தார். அந்தச் சமயத்தில்தான் யுனைட்டெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் நாடகக்குழுவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து சொந்தமாக ஒரு நாடகக்குழுவை ஏற்படுத்தினார். மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, மெழுகுவர்த்தி, நவக்ரஹம் போன்ற நாடகங்களை அவரே தயாரித்து இயக்கினார்.

எம்.ஜி.ஆர் நடித்த 'தெய்வத்தாய்' படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு வந்தது; எழுதினார். அந்தச் சமயத்தில், தான் பணியாற்றிய அலுவலகத்தில் கண்காணிப்பாளராகவும் பதவி உயர்வு வந்தது. இதற்கிடையே இவரின் 'சர்வர் சுந்தரம்' நாடகத்தைப் படமாக்கும் உரிமையைப் பெற்ற ஏ.வி.எம் செட்டியார், அதை கிருஷ்ணன் - பஞ்சு இரட்டை இயக்குநர்களைக்கொண்டு நாகேஷை ஹீரோவாக நடிக்கவைத்து தயாரித்தார். படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது. இவரின் இன்னொரு நாடகமான ‘மேஜர் சந்திரகாந்த்’ இந்தியில் படமாக எடுக்கப்பட்டு, தேசிய விருது பெற்றது.

1965-ல் 'நீர்க்குமிழி' மூலம் இயக்குநராக அறிமுகமானார் கே.பி. அதைத் தொடர்ந்து 'நாணல், மேஜர் சந்திரகாந்த், எதிர்நீச்சல்...' என தன் நாடகங்களையே படமாக எடுத்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் இவர் இயக்கிய ‘பாமா விஜயம்’ இவரை டிரெண்ட் செட்டர் இயக்குநர் ஆக்கியது. இவரின் ‘இருகோடுகள்’ சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதை பெற்றது. ‘அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், அவள் ஒரு தொடர்கதை, நான் அவன் இல்லை...' என இவர் இயக்கிய படங்கள் விமர்சனம், வியாபாரம், சர்ச்சை என ஏதோ ஒருவகையில் மக்களிடம் சென்றடைந்துகொண்டே இருந்தது. ‘ஏக் துஜே கே லியே’ இவர் எழுதி இயக்கிய இந்திப் படம், 1981-ல் வெளிவந்து காதல் சினிமாக்களின் டிரெண்ட் செட்டராக அமைந்தது.

இவரின் படங்கள் வெவ்வேறு வடிவங்களில் இருந்ததாலும், அவை பெரும்பாலும் சமூக அரசியல் விஷயங்களையே மையப்படுத்தியவையாக அமைந்தன. இந்தியப் பெண்களின் நிலை, அவர்களின் பரிதாப நிலைகளை இவரின் படங்கள் பேசின. ‘பார்த்தாலே பரவசம்’ இவரின் 100-வது படம். ‘பொய்’ கே.பி இயக்கிய 101-வது படம். அதோடு சினிமா இயக்குவதை நிறுத்திக்கொண்டாலும் சினிமா ரசிகராக இளைய தலைமுறைக் கலைஞர்களை ஏகத்துக்கும் உற்சாகப்படுத்தி வந்தார்!

சின்னத் திரையிலும் குறிப்பிடத்தக்க பல சாதனைகளை நிகழ்த்தினார். இவரின் முதல் தொலைக்காட்சி தொடர் 'ரயில் சிநேகம்.' 1990-ல் தூர்தர்ஷனுக்குகாக எடுத்தார். ‘கையளவு மனசு’ இவரின் டிரெண்ட் செட்டர் சீரியல். மெகா சீரியல் என்ற கான்செப்ட்டை ‘ரகுவம்சம்’ மூலம் துவக்கிவைத்தார். இவர் தமிழ் சினிமாவில் 65-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். கமலஹாசன், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டவர்கள் அதில் பிரபல ஆளுமைகள்!

கே.பியின் படைப்புகள் அவரின் நினைவை என்றும் நம்முடன் அழுத்தமாகப் பதித்திருக்கும்!

- ம.கா.செந்தில் குமார்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் புகழுக்கு காரணமானவர் கே.பாலசந்தர்

கே.பாலசந்தர் புரட்சிகரமான கருத்துகளை திரைப்படங்களில் துணிந்து கூறியவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பட உலகிற்கு அறிமுகம் செய்தவர். கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஆகியோர் புகழின் சிகரத்தை அடைவதற்கு வழி வகுத்தவர். மாறுபட்ட திரைப்படங்களை வழங்கி ‘‘இயக்குனர் சிகரம்’’ என்ற பட்டத்தை பெற்றவர்.

அரசு வேலை

தஞ்சை மாவட்டம் நன்னிலத்திற்கு அருகில் உள்ள நல்லமாங்குடியில் கிராம முன்சீப்பாக இருந்த கைலாசம் அய்யர்-காமாட்சியம்மாள் தம்பதிகளின் மகனாக 9-7-1930-ல் பாலசந்தர் பிறந்தார். பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே நாடகங்கள் நடத்துவதில் நாட்டம் கொண்டிருந்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ‘பி.எஸ்.சி.’ பட்டம் பெற்றார்.

1950-ல் சென்னையில் ‘அக்கவுண்டன்ட் ஜெனரல்’ அலுவலகத்தில் வேலை கிடைத்தது. வேலை பார்க்கும்போது அவர் கதை-வசனம் எழுதி இயக்கிய ‘மெழுகுவர்த்தி’, ‘மேஜர் சந்திரகாந்த்’ முதலான நாடகங்கள் புகழ் பெற்றன.

எம்.ஜி.ஆர். பாராட்டு

ஒருமுறை ‘மெழுகுவர்த்தி’ நாடகத்திற்கு தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர்., பாலசந்தரின் திறமையை பாராட்டினார். அதைத்தொடர்ந்து ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரிப்பான ‘தெய்வத்தாய்’ படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு தேடி வந்தது. தொடர்ந்து, ‘சர்வர் சுந்தரம்’, ‘பூஜைக்கு வந்த மலர்’, ‘நீலவானம்’ ஆகிய படங்களுக்கு கதை-வசனம் எழுதினார்.

அடுத்து, மேஜர் சந்திரகாந்த், பாமா விஜயம், அனுபவி ராஜா அனுபவி, தாமரை நெஞ்சம், பூவா தலையா ஆகிய படங்களை இயக்கினார். 1969-ல் அவர் டைரக்ட் செய்த ‘‘இருகோடுகள்’’ மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. பின்னர், சிவாஜி கணேசன் நடித்த ‘‘எதிரொலி’’ படத்தை இயக்கினார். பிறகு காவியத்தலைவி, புன்னகை, வெள்ளிவிழா அரங்கேற்றம் உள்பட பல படங்களை டைரக்ட் செய்தார்.

ரஜினிகாந்த்

1975-ல் வெளிவந்த ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தினார். இதேபோல், குழந்தை நட்சத்திரமாக இருந்த ஸ்ரீதேவியை ‘‘மூன்று முடிச்சு’’ மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். ‘‘களத்தூர் கண்ணம்மா’’வில் அறிமுகமாகி பல படங்களில் சிறுவனாக நடித்து வந்த கமல்ஹாசன், வாலிப வயதை அடைந்ததும், ‘‘அரங்கேற்றம்’’, ‘அவள் ஒரு தொடர்கதை’’ ஆகிய படங்களில் முக்கிய வேடங்கள் அளித்து அவரை கதாநாயகனாக உயர வழி வகுத்தார்.

தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்தார். ரெயில் சினேகம், கையளவு மனசு போன்ற தொடர்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

டைரக்டர் சங்கர் தயாரிப்பில் வெளிவந்த ‘‘ரெட்டைசுழி’’ படத்தில் நடித்து இருக்கிறார்.

பாலசந்தரின் ‘‘இருகோடுகள்’’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ ஆகிய படங்கள் மத்திய அரசின் விருதுகளைப் பெற்றன. ‘சிந்து பைரவி’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’ ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘எதிர்நீச்சல்’, ‘அக்னிசாட்சி’, ‘தாமரை நெஞ்சம்’, ‘மரோசரித்ரா’, முதலான படங்கள் மாநில அரசு விருது, பிலிம்பேர் பரிசு முதலிய விருதுகளை வென்றுள்ளன.

பால்கே விருது

1974-ல் தமிழக அரசின் ‘‘கலைமாமணி’’ விருதை பெற்ற இவருக்கு, 1987-ல் மத்திய அரசு ‘‘பத்மஸ்ரீ’’ விருதை வழங்கியது. 2011-ல் பாலசந்தருக்கு சினிமா உலகின் உயரிய விருதான ‘‘தாதா சாகேப் பால்கே’’ விருது வழங்கப்பட்டது.

பாலசந்தர், ஏ.ஜி.எஸ்.ஆபிஸ் குமாஸ்தாவாகப் பணியாற்றிய போதே 31-5-1956-ல் திருமணம் நடந்து விட்டது. மனைவி பெயர் ராஜம். இந்த தம்பதிகளுக்கு கைலாஷ், பிரசன்னா என்ற 2 மகன்களும், புஷ்பா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் கைலாஷ் சமீபத்தில் மரணம் அடைந்தார்.

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...