Wednesday, December 24, 2014

ரூ.500,1000 நோட்டுகளை மாற்ற அவகாசம் நீட்டிப்பு

புதுடில்லி:ரூ.500,ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் வசதியை மேலும் ஆறு மாத காலத்திற்கு நீடித்துள்ளது ரிசர்வ் வங்கி.
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டு்ள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டு இருப்பதாவது:
கடந்த 2005ம் ஆண்டுக்கு முன், ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்ட ரூபாய் நோட்டுகளில், ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்காது. 2005க்கு பின் வெளியான நோட்டுகளில் தான், எந்த ஆண்டில் அந்த நோட்டு தயாரிக்கப்பட்டது என்பது, தனியாக குறிக்கப்பட்டிருக்கும்.2005ம் ஆண்டுக்கு முன் அச்சடிக்கப்பட்ட, 500, 1,000 ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்கள் வெகுகுறைவாக இருப்பதால்,அந்த நோட்டுகளை மாற்ற, ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.
பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடுவை, ஜன., 1 வரை, ரிசர்வ் வங்கி நீட்டித்தது. இதுவரை, 53 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 147 கோடி ரூபாய் மதிப்பிலான, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டு உள்ளன.
இந்நிலையில் மேலும் ஆறுமாதம் காலஅவகாசம் அதாவது ஜூன் மாதம் 2015-ம் ஆண்டு வரையில் கால அவகாசம் அளித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024