Tuesday, January 16, 2018

அறிமுகம்!முக அடையாளத்தால் ஆதாரை சரிபார்க்கும் புதிய வசதி...
மக்களுக்கு சிரமங்களை போக்குவதில் ஆணையம் உறுதி


புதுடில்லி : முகத்தைக் காட்டி, அதன் அடையாளத்தை வைத்து, ஆதார் விபரத்தை சரிபார்க்கும் புதிய வசதியை, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.



நாடு முழுவதும், 120 கோடி பேருக்கு, ஆதார் அடையாள அட்டைகளை, ஆதார் அடையாள அட்டை ஆணையம் வழங்கி உள்ளது. மத்திய அரசு வழங்கும், பல்வேறு நலத்திட்டங்களின் பயன்களைப் பெற, ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வங்கி சேவை, ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி போன்றவற்றுக்கும் ஆதார் முக்கிய தேவையாக மாறி வருகிறது.

பயோ மெட்ரிக்:

மொபைல் போன் சிம் கார்டுகள் வாங்குவதற்கும், ஆதார் மூலம், பயோமெட்ரிக் தகவல்கள் பெறப்பட்டு சரிபார்க்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படுகின்றன. இதனால், வாடிக்கையாளர்களுக்கு சேவை கிடைப்பது எளிதாகிறது. தற்போது, சம்பந்தப்பட்ட நபரின் கைவிரல் ரேகை, கருவிழி ரேகை ஆகியவற்றை வைத்து, அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த அம்சங்களுடன், சம்பந்தப்பட்ட நபரின் முகத்தை படம் பிடித்து, சரிபார்க்கும் வசதியையும், ஆதார் ஆணையம் அனுமதிக்க உள்ளது.

இந்த வசதி, கைவிரல் ரேகை, கருவிழி ரேகை போன்ற பயோமெட்ரிக் பதிவுகளை வைத்து, சம்பந்தப்பட்டவரின் அடையாளத்தை உறுதி செய்வதில் சிரமம் இருப்போருக்கு பெரிய உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து, யு.ஐ.டி.ஏ.ஐ., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வயதாவதாலும், கடுமையான வேலைகள் செய்வதாலும் ஏற்படும் கைவிரல் ரேகை தேய்மானம், கருவிழி ரேகையில் மாற்றம் போன்ற காரணங்களால், அவற்றை வைத்து, சம்பந்தப்பட்ட ஆதார் எண் வைத்திருப்பவரை உறுதி செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.

விர்ச்சுவல் ஐ.டி.,:

அத்தகைய சூழலில், அந்த நபரின் முகத்தை படம் பிடித்து, அதை, ஆதார் பயோமெட்ரிக் தகவல்களுடன் சரிபார்க்கும் பணி நடைபெறும். முக அடையாளத்தை, தற்போது நடைமுறையில் உள்ள கைரேகை பதிவு அல்லது கருவிழி ரேகை பதிவு அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு, ஓ.டி.பி., எனப்படும், ஒரு முறை அனுப்பும், 'பாஸ்வேர்டு' ஆகிய இவற்றில் ஏதாவது ஒன்றுடன் சேர்த்து, சம்பந்தப்பட்ட நபரின் அடையாளம் உறுதி செய்யப்படும்.

இத்திட்டம், ஜூலை, 1 முதல் பயன்பாட்டுக்கு வரும். சம்பந்தப்பட்ட நபரின் தேவை அடிப்படையில், இந்த புதிய வசதி பயன்படுத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆதார் அடையாள அட்டை ஆணையம், ஆதார் அட்டையில் தரப்படும், 12 இலக்க எண்ணிற்கு பதில், 'விர்ச்சுவல் ஐ.டி.,' எனப்படும் புதிய வசதியை, கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. அந்த வசதி, மார்ச், 1 முதல் பயன்பாட்டுக்கு வரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

'இந்த, ஐ.டி.,யை, டிஜிட்டல் முறையில், 16 இலக்க எண்ணாக உருவாக்கிக் கொள்ளலாம். ஒரு முறை பயன்படுத்திய பின், வேறு புதிய ஐ.டி.,யை உருவாக்கும்போது, பழைய ஐ.டி., எண் ரத்தாகி விடும். 'இதன் மூலம், ஆதார் எண்ணை, யாரிடமும் தெரிவிக்கும் அவசியம் எழாது' என, ஆதார் அடையாள அட்டை ஆணையம் கூறி இருந்தது.

தகவல்களை பாதுகாக்க 'டிஜிட்டல் லாக்' வசதி :

ஆதார் தகவல்கள் திருடப்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படும் புகார்களை, ஆதார் ஆணையம் திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இருப்பினும், ஆதார் தகவல்களுக்கு, பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், 'பயோமெட்ரிக் லாக்' எனப்படும், டிஜிட்டல் பூட்டை, யு.ஐ.டி.ஏ.ஐ., உருவாக்கி உள்ளது. இதை பயன்படுத்தி, ஆதார் தகவல்களை, தேவைப்படும்போது, அதன் உரிமையாளர், 'லாக்' செய்ய முடியும். தேவைப்படும்போது, அதை திறந்து, அதில் உள்ள தகவல்களை, மொபைல் போன் சேவை நிறுவனங்கள், வங்கிகள் போன்ற ஏஜன்சிகள் பார்க்க அனுமதிக்கலாம். பயோமெட்ரிக் லாக்கை, ஆதார் ஆணைய இணையதளத்தில் நுழைந்து, அதற்கான டிஜிட்டல் படிவத்தில், ஆதார் எண்ணை பதிவு செய்து பெறலாம். இந்த வசதியை பெற, ஆதாருடன் பதிவு செய்த, மொபைல் போன் எண் அவசியம்.
ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

Updated : ஜன 16, 2018 16:44 | Added : ஜன 16, 2018 15:58 



  புதுடில்லி: ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள முஸ்லிம்களுக்கு அளித்து வந்த மானியத்தை மத்திய அரசு ரத்து செய்தது. 2012ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உததரவின் அடிப்படையில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஆண்டு தோறும் ஏராளமான முஸ்லிம்கள் புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவிலிருந்து செல்லும் ஹஜ் பயணியருக்கு மத்திய அரசு, கடந்த 1954ம் வருடம் முதல் மத்திய அரசு மானியம் மானியம் வழங்கி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவிலிருந்து சராசரியாக 1.5 லட்சம் பேர் ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவரின் தலைக்கும் விமான டிக்கெட் கட்டணமாக 74 ஆயிரம் ரூபாயும், தினசரி செலவாக ரூ. 2,700ம் செலவு செய்யப்படுகிறது.கடந்த 2017 ம் வருடம் இதற்காக 700 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தது. இது பழைய கணக்கு.

கல்விக்கு செலவழிக்கப்படும்: அமைச்சர்

இந்நிலையில், ஹஜ் மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இந்த நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. இதனை மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார். மேலும், இந்த நிதி சிறுபான்மை பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவிடப்படும். கடல் வழியே யாத்திரை மேற்கொள்ள வழிவகை செய்யப்படும். சவுதி அரசு இதனை ஏற்று கொண்டுள்ளது. என்றும் கூறினார்.

மத்திய அரசின் அறிவிப்பால், இந்த வருடம் 1.75 லட்சம் பேர் மானியம் இல்லாமல் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

காரணம் என்ன

2012 மே மாதம் ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் அப்போதைய நீதிபதிகள் அல்டாமஸ் கபீர் மற்றும் ரஞ்சனா தேசாய் அடங்கிய பெஞ்ச், ஹஜ் மானியத்தை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும்படி உத்தரவிட்டிருந்தது. அதன்படியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிப்ரவரியில் கமல் கட்சி பெயர் அறிவிப்பு

Added : ஜன 16, 2018 18:28



சென்னை:பிப்ரவரி மாத மத்தியில் அரசியல் கட்சி பெயரை அறிவித்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து அறிக்கையை நாளை வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏற்கனவே ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து வெளியிட்டுள்ள நிலையில் தற்போது கமல் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்க உள்ளது அரசியல வட்டாரத்தில் பரபரப்பாக உள்ளது.
முன்னரே கிளம்பிய விமானம்: பயணிகள் அவதி

Updated : ஜன 16, 2018 10:05 | Added : ஜன 16, 2018 10:05


 

மும்பை: ஐதராபாத் செல்லும் இண்டிகோ விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு 25 நிமிடங்களுக்கு முன்பே கிளம்பி சென்றது. இதனால் 14 பயணிகள் விமானத்தில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

குற்றச்சாட்டு

இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான எண் 6E 259 என்ற விமானம் கோவாவில் இருந்து இரவு 10.50 மணிக்கு கிளம்பி நள்ளிரவு 12.05 மணிக்கு ஐ தராபாத் நகருக்கு செல்லும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விமானத்தில் பல பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் இந்த விமானம் 25 நிமிடங்களுக்கு முன்னதாக கிளம்பி 11.40 மணிக்கு ஐ தராபாத் நகருக்கு சென்றடைந்தது. இதனால் விமானத்தில் செல்ல வேண்டிய 14 பேர் கோவா விமான நிலையத்தில் செய்வதறியாமல் தவித்தனர். அறிவிக்கப்பட்ட நேரத்தை விட முன்னரே விமானம் கிளம்பி சென்று விட்டதாக குற்றம்சாட்டினர்.

தவறு இல்லை

ஆனால், இதனை மறுத்துள்ள இண்டிகோ விமான நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில், விமானத்திற்கு செல்வதற்கான பாதையில் உள்ள கதவு, இரவு 10.25 மணிக்கு மூடப்பட்டது. ஆனால், விமானத்தை தவற விட்டவர்கள் இரவு 10.33 மணிக்கு தான் வந்தனர். விமானம் கிளம்புவது குறித்து ஊழியர் ஒலிபெருக்கி மூலம் பல முறை அறிவிப்பு செய்தார். அவர்கள் அளித்த மொபைல் போன் எண் மூலமும் தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். ஆனால், அந்த போன் எண் ஏஜென்ட் எண். அவரும், பயணிகளின் மொபைல் போன் எண்ணை தர மறுத்து விட்டார். பயணிகளை நாங்கள் தேடியதை சிலர் நேரடியாகபார்த்துள்ளனர். எங்கள் மீது தவறு இல்லாத பட்சத்திலும், விமானத்தை தவற விட்டவர்கள், காலை எங்களுக்கு சொந்தமான வேறு விமானத்தில் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

Monday, January 15, 2018

Loooking for a one way ride to the neighbouring city? We have some customized packages to suit your needs. Chose our one-way package and travel at affordable rates.
Whether you need one of our plentiful Minis, our best-in-class Prime Sedans, or you're taking a Prime SUV, Ola has you covered.
Advance Booking: Get a ride within 1 hour of booking or book up to 7 days in advance
Roadside assistance: If your cab breaks down, contact Ola support, and get a substitute ride
Safe Journey: SOS button is just a tap away & your friends or family can track your ride
Chennai to Pondicherry
Base Fare Driver Allowance Total Fare*
Rs.1999 Rs.200 Rs.2199
Pondicherry to Chennai
Base Fare Driver Allowance Total Fare*
Rs.2599 Rs.200 Rs.2799
*One-way rates for Mini Category | Tolls & Taxes extra | For detailed fare structure check Ola app.

"வாலியை ரொம்பவே மிஸ் பண்றேன்!”

ஹ்மானின் இசைப்புயலுக்குத் தயாராகிறது சென்னை. 2018-ன் முதல் அரங்காக சென்னையில் மிகப்பெரிய இசைத்திருவிழாவை நடத்தவிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானைச் சந்தித்தேன்.
``புதிய குரல்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் சவால் எப்படி இருக்கிறது?”
``இறைவன் படைப்புகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாகத்தான் இருக்கும். எதிர்பார்க்காத ஆச்சர்யமெல்லாம் சில திறமையாளர் களிடமிருந்து கிடைக்கும். சக்தி ஸ்ரீகோபாலன் அப்படித்தான் கிடைத்தார். அடிப்படையில் அவர் ஒரு ஆர்க்கிடெக்ட். வேறொரு வேலைக்காக வந்தவர், மணிசாரிடம் “என்னுடைய சி.டி. கேட்டிருக்கீங்களா?” என்று கேட்க, அப்போதுதான் அவர் பாடகி என்பதே தெரிந்தது. ‘இந்த முறை என்ன சர்ப்ரைஸ் கிடைக்கும்... ஏதாவது புதுசா கேட்கமுடியுமா?’ என்ற கேள்வியோடுதான் இளம் பாடகர்களைத் தேடுவேன். இப்போது ‘7-UP தமிழ்நாட்டின் குரல்’ நிகழ்ச்சியின் மூலம் புதிதாக ஏழு குரல்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.’’

“சர்வதேச அளவில் இந்தியாவின் இசைமுகமாக நீங்கள் பார்க்கப்படுகிறீர்கள். இந்த 25 ஆண்டு இசைப்பயணம் பற்றிச் சொல்லுங்கள்?”
``என் அம்மாவுக்கு நான் இசைத்துறைலதான் வரணும்னு ஆசை இருந்தது. என்னைச் சுத்தி நல்ல மனிதர்கள் இருந்தாங்க. இப்ப 25 வருஷங்கள் ஆகிடுச்சான்னு எனக்கே ஆச்சர்யமா இருக்கு.  எல்லாப் புகழும் இறைவனுக்கே!”

“சின்ன வயதிலிருந்தே நீங்கள் பிஸிதான். வாழ்க்கையில் எதை மிஸ் பண்ணுவதாக நினைக்கிறீர்கள்?”
``பெருசா எதையும் மிஸ் பண்ணலைன்னுதான் தோணுது. சின்ன சின்ன விஷயங்கள் சில இருக்கலாம். ஆஸ்கர் விருது வாங்கினப்புறம், நாலு வருஷம் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்துல குடும்பத்தோட தங்கியிருந்தேன். அப்போ அங்க ஒரு கார் வெச்சிருந்தேன். ஃபேமலியக் கூட்டீட்டு எங்கெங்க சுத்தணுமோ சுத்தினேன். அதுதான் இப்ப மிஸ் ஆகுதோனு தோணுது. மத்தபடி ஆல் இஸ் வெல்.”



“சமூக வலைதளங்களில் ரொம்ப ஆர்வமா இருக்கீங்களே?”
“நான் ட்விட்டர்ல ஆக்டிவா இருக்கேன். முதல்ல என்னோட YM மூவிஸ் நிறுவனத்தின் புரமோஷனுக்காகத்தான் சோஷியல் மீடியாவுக்குள்ளே வந்தேன். ஆனால், ரசிகர்களோட அன்பு, அளவிடவே முடியாத  பாசம் என்னை அப்படியே கரைச்சிடுச்சு. ரசிகர்களோட தொடர்புல இருக்கிறதும் அவங்க அன்பை நேரடியா ஃபீல் பண்றதும் ரொம்பவே சந்தோஷமா இருக்கு.”

“​இந்தியாவில் ரெகார்டிங் ​ஸ்டுடியோக்களின் தரம் எப்படி இருக்கு?”
``இப்ப ரெகார்டிங்கையெல்லாம் ஒரு லேப்டாப்லயே முடிக்கற அளவுக்கு அட்வான்ஸ் ஆகிடுச்சு. நிறைய புதிய முயற்சிகள், எக்ஸ்ட்ரார்டினரி சவுண்டிங்கை அதுல கொண்டு வரமுடியுது.”​

“ரஹ்மான் எப்போது செம எனர்ஜியோட இருப்பார்?”
``நல்ல தூக்கம் இருந்தா! (சிரிக்கிறார்) அதுக்கப்புறம் அசாதாரணமான கலைஞர்கள்கூட வேலை செய்யறப்ப அந்த எனர்ஜி நமக்கும் தொத்திக்கும். வைரமுத்து, மணிரத்னம், ஷங்கர்னு இவங்ககூடவெல்லாம் வொர்க் பண்றப்ப எனர்ஜி பல மடங்கா இருக்கும். வாலி நான் ரொம்பவே மிஸ் பண்ற ஒரு கவிஞர். அவரோட லெகஸியும், எனர்ஜியும் அவ்ளோ ஆச்சர்யம். சின்னச் சின்னக் கதைகள் சொல்லுவார். அதையெல்லாம் இப்ப மிஸ் பண்றேன். அவ​ரை ‘என்சைக்ளோபீடியா ஆஃப் மெனி தி​ங்ஸ்’னு  சொல்லலாம்!”

ஒன்பது வயதிலேயே பெரியார் முன்பு பேசியவள் நான்!'  - விருது சர்ச்சையை விளாசும் வளர்மதி #VikatanExclusive

  மிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த அறிஞர்களுக்கு தமிழக அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில். தந்தை பெரியார் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான பா.வளர்மதி. ' ஜெயலலிதாவுக்காக தீச்சட்டி ஏந்திய வளர்மதிக்கா பெரியார் விருது?' என சமூக ஊடகங்களில் சிலர் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். 
தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத் தலைவர் பா.வளர்மதியிடம் பேசினோம். 

தமிழக அரசின் விருது அறிவிப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

``சிறுவயதில் இருந்தே பெரியார் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவள் நான். ஒன்பது வயது குழந்தையாக இருந்தபோது, என்னுடைய சொந்த கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பெரியார் கலந்துகொண்டார். என்னுடைய தந்தையின் முயற்சியால், அவர் முன்னால் மேடையில் பேசியிருக்கிறேன். அப்போது பெரியாரைச் சுட்டிக்காட்டி, ' நீயும் இந்த தாத்தா மாதிரி பெரிய ஆளா வரனும்' எனச் சொன்னார் என் அப்பா. அவர் இறுதிவரையில் திராவிட இயக்கக் கொள்கைகளில் உறுதியாக இருந்தவர். எனக்கு இப்படியொரு விருது கிடைக்கும் என நான் நினைத்துப் பார்க்கவில்லை. மிகப் பெரிய தலைவராக பெரியாரை நேரில் பார்த்து வியந்திருக்கிறேன். தி.கவில் இருந்து தி.மு.கவுக்கு வந்து பின்னர் அ.தி.மு.கவில் இணைந்து இத்தனை ஆண்டுகாலமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். மூன்று பெரும் தலைவர்களைப் பார்த்து வளர்ந்தவள் நான். திராவிட இயக்கத்துக்காக உழைத்த காரணத்துக்காக அம்மாவின் அரசு சார்பாக முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இந்த விருதை எனக்கு அறிவித்திருக்கிறார்". 

இப்படியொரு விருது கிடைக்கும் என முன்னரே எதிர்பார்த்தீர்களா? 

``இல்லை. பெரியார் விருது கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை." 

பெரியார் கொள்கைகள்குறித்து உங்களுடைய பார்வை என்ன? 

`` பெண்களின் முன்னேற்றத்துக்காக பெரியார் செய்த சமூகசீர்திருத்தம் மிக முக்கியமான ஒன்று. பெண்ணுரிமைக்காக அவர் உழைத்த உழைப்புதான் இன்று பல துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்கக் காரணம். அவருடைய கொள்கைகள் எப்போதும் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். பெண்ணுலகம் இந்தளவுக்கு உயர்ந்த நிலையை அடைந்ததற்கு அடிப்படை ஆதாரம் பெரியார்."

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டும் என்பதற்காக நீங்கள் தீச்சட்டி ஏந்தினீர்கள். இந்தப் படங்களைப் பதிவிட்டு, இவருக்கா பெரியார் விருது என சமூக ஊடகங்களில் சர்ச்சை எழுந்துள்ளதே? 

`` எவ்வளவு பெரிய கொள்கைகளைத் தாங்கியவர்களாக நாம் இருந்தாலும், வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் உடனே ஆண்டவனைத்தான் கும்பிடுவோம். ' என் அப்பா, அம்மா நல்லா இருக்கனும்' என வேண்டிக்கொள்வோம். அப்படித்தான் அம்மாவுக்கும் பிரார்த்தனை செய்தோம். இது சாதாரண நிகழ்வுதான். சமூக ஊடகங்களில் இருப்பவர்கள் அனைத்தையும் விமர்சனம் செய்கிறார்கள். அவர்கள் யாரைத்தான் விமர்சனம் செய்யவில்லை. விமர்சனங்களை எப்போதுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருவருக்கு எதாவது உயர்வு வந்தால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், அம்மா என அனைவருமே விமர்சனங்களை எதிர்கொண்டவர்கள்தான். இன்று வரையில் அரசியலில் யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் விமர்சனத்துக்கு ஆளாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வர வேண்டும்."

சரியான நேரத்தில் இந்த விருது கிடைத்துள்ளதாக நினைக்கிறீர்களா? 
`` அப்படிச் சொல்லத் தெரியவில்லை. திராவிட இயக்கத்தில் நான் உழைத்த உழைப்புக்குக் கிடைத்த பரிசாக இதைப் பார்க்கிறேன். 1967-ல் இருந்து தி.மு.கவில் தீவிர பேச்சாளராக இருந்தேன். அதன்பிறகு தி.மு.கவில் இருந்து எம்.ஜி.ஆர் பிரிந்த பிறகு, அவருடைய தலைமையில் அ.தி.மு.கவில் இணைந்தேன். இத்தனை வருட உழைப்புக்கு விருது கிடைத்திருக்கிறது. பெரியார் விருது என்பது மிகப் பெரிய விஷயம். சும்மா இருந்தால் யாராவது விருது கொடுப்பார்களா? பொதுநல நோக்கோடு பாடுபடாதவர்களுக்கு விருது கொடுத்தால் விமர்சிக்கலாம். நெற்றில் திருநீரும் பொட்டும் வைத்துக்கொள்வதால் மட்டும் திராவிட இயக்கக் கொள்கைகளை இழுத்து மூடிவிட முடியுமா? பெரியாரைப் பார்த்துப் பார்த்து வளர்ந்தவர் கருணாநிதி. இன்று, 'அவர் நன்றாக இருக்க வேண்டும்' என்பதற்காக, அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாம் ஆலயத்துக்குச் செல்கிறார்கள். அதற்காக பெரியார் கொள்கையில் இருந்து தி.மு.க விலகிவிட்டது எனச் சொல்ல முடியுமா?"

NEWS TODAY 11.06.2026