Tuesday, January 16, 2018

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

Updated : ஜன 16, 2018 16:44 | Added : ஜன 16, 2018 15:58 



  புதுடில்லி: ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள முஸ்லிம்களுக்கு அளித்து வந்த மானியத்தை மத்திய அரசு ரத்து செய்தது. 2012ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உததரவின் அடிப்படையில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஆண்டு தோறும் ஏராளமான முஸ்லிம்கள் புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவிலிருந்து செல்லும் ஹஜ் பயணியருக்கு மத்திய அரசு, கடந்த 1954ம் வருடம் முதல் மத்திய அரசு மானியம் மானியம் வழங்கி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவிலிருந்து சராசரியாக 1.5 லட்சம் பேர் ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவரின் தலைக்கும் விமான டிக்கெட் கட்டணமாக 74 ஆயிரம் ரூபாயும், தினசரி செலவாக ரூ. 2,700ம் செலவு செய்யப்படுகிறது.கடந்த 2017 ம் வருடம் இதற்காக 700 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தது. இது பழைய கணக்கு.

கல்விக்கு செலவழிக்கப்படும்: அமைச்சர்

இந்நிலையில், ஹஜ் மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இந்த நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. இதனை மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார். மேலும், இந்த நிதி சிறுபான்மை பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவிடப்படும். கடல் வழியே யாத்திரை மேற்கொள்ள வழிவகை செய்யப்படும். சவுதி அரசு இதனை ஏற்று கொண்டுள்ளது. என்றும் கூறினார்.

மத்திய அரசின் அறிவிப்பால், இந்த வருடம் 1.75 லட்சம் பேர் மானியம் இல்லாமல் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

காரணம் என்ன

2012 மே மாதம் ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் அப்போதைய நீதிபதிகள் அல்டாமஸ் கபீர் மற்றும் ரஞ்சனா தேசாய் அடங்கிய பெஞ்ச், ஹஜ் மானியத்தை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும்படி உத்தரவிட்டிருந்தது. அதன்படியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...