Wednesday, June 20, 2018

ரூபாய் நோட்டுகள், நாணயங்களில் நுண்கிருமிகளால் மக்கள் பாதிப்பு: உணவு பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை

Published : 20 Jun 2018 07:24 IST
  சென்னை



ரூபாய் நோட்டுகள், நாணயங்களில் உள்ள நுண்கிருமிகள் தொற்றால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அனைத்து மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர்களுக்கும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) சுற்றறிக்கை அனுப்பி யுள்ளது.

இதுதொடர்பாக எஃப்எஸ்எஸ்ஏஐ அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ரூபாய் நோட்டுகளை எண்ணும்போது எச்சிலை பயன்படுத்துதல், அழுக்கு படிந்த கைகளால் நுண்கிருமிகள் அவற்றில் தொற்றிக் கொள்கின்றன. இவ்வாறான நோட்டுகள், நாணயங்களை பயன்படுத்தும்போது உணவு நஞ்சாதல், வயிறு, சுவாச கோளாறுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, குழந்தைகள், கருவுற்ற பெண்கள், வயதானவர்கள், நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ளவர்கள் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

மேலும், உணவு வணிகர்கள், குறிப்பாக சாலையோரங்களில் கடை வைத்திருப்பவர்களில் பலர் பணத்தை பெற்றுக்கொள்ளும் கைகளாலேயே உணவை பரிமாறுகின்றனர். எனவே, உணவு பரிமாறுபவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. உணவு பரிமாறும் போது கையுறைகளை பயன்படுத்தலாம்.

ஒருவேளை ரூபாய் நோட்டுகள், நாணயங்களை பெற்றுக்கொள்ளும் கையால் உணவு பரிமாறினால் கைகளை நன்றாக கழுவிய பிறகே பரிமாற வேண்டும். இதுதொடர்பாக மக்களிடையே உணவு பாதுகாப்புத் துறையினர் வழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் பறக்குது ஆண்டிபட்டி வெண்டை

Added : ஜூன் 20, 2018 05:46

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி.அணைக்கரைப்பட்டியில் விளையும் வெண்டைக்காய்சிங்கப்பூர், ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.வைகை ஆற்றின் கரையோரம் உள்ள டி.அணைக்கரைப்பட்டி,டி.புதுார், வெள்ளையத்தேவன்பட்டி, மூணாண்டி பட்டியில் வீரிய ரக வெண்டை, மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுஉள்ளது. விளையும் இவற்றை தினமும் ஏஜன்சி மூலம் தோட்டங்களில் இருந்துசேகரித்து விவசாயிகள் ஏற்றுமதி வியாபாரிகளுடன் ஒப்பந்தம் செய்கின்றனர்.

டி.அணைக்கரைப்பட்டி விவசாயி சிங்கம் கூறியதாவது:ஆண்டிபட்டி பகுதியில் இருந்து தினமும் 200கிலோ வரை வெண்டை, மிளகாய் ஏற்றுமதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.அதிகாலையில் பறிக்கப்படும் காய்கள் விமானத்தில் மறுநாள் காலை சிங்கப்பூர் சென்றடையும்.பின்னர் அங்கிருந்து மற்ற வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு செல்கிறது. வெண்டைக்குகுறைந்த பட்சமாக கிலோ ரூ.15, மிளகாய்க்கு ரூ.45 நிர்ணயம் செய்துள்ளனர். பல நேரங்களில் கூடுதல் விலையும் கிடைக்கிறது.உள்ளூர் மார்க்கெட்டில் கமிஷன் கடை வியாபாரிகள் விலையை குறைத்து விவசாயிகளுக்குபாதிப்பு ஏற்படுத்துகின்றனர், என்றார்.
உதவி பேராசிரியர் பணிக்கு பிஎச்.டி., கட்டாயம் : யு.ஜி.சி., முடிவிற்கு வரவேற்பு

Added : ஜூன் 20, 2018 05:46

மதுரை: உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் கல்லுாரி மற்றும் பல்கலை உதவி பேராசிரியர் பணிக்கு முனைவர் (பிஎச்.டி.,) பட்டம் கட்டாயம் என பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) உத்தரவிட்டது

 கல்வியாளர், பேராசிரியர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.நாட்டின் வளர்ச்சிக்கான தலையெழுத்தை நிர்ணயிப்பதில் உயர்கல்விக்கு முக்கிய பங்குண்டு. பல சவாலான சமூக, பொருளாதார பிரச்னைகளுக்கு ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் மூலம் தீர்வு சொல்லும் களங்களாக பல்கலைகள், கல்லுாரிகள் உள்ளன.ஆனால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கல்வி 'கடைச்சரக்கு' போல் ஆகி விட்டது. பல்கலையை நிர்வகிக்கும் கண்ணியமிக்க துணைவேந்தர் பணியிடங்கள் பல கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்படுகின்றன.அதேநேரத்தில் உயர்கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் யு.ஜி.சி., மூலம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

ஆசிரியர்களின் கல்வித் திறனை அளவிட புதிய வழிமுறைகளையும் யு.ஜி.சி., வகுத்துள்ளது. இதில் முக்கியமானது,'ஆராய்ச்சிப் பணி, கல்வி சார்ந்த இதழ்கள் வெளியிடுவதை மட்டும் ஆசிரியர்களின் நீண்டகால அனுபவத்திற்கு அளவுகோலாக எடுத்துக்கொள்ள கூடாது. தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்.கல்லுாரி, பல்கலைகளில் உதவி பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெறுவது கட்டாயம்' என மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் அறிவித்தார். யு.ஜி.சி.யின் இந்த விதிமுறை 2021ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:தரம் மேம்படும் முனைவர் முத்துராஜா, பேராசிரியர், அமெரிக்கன் கல்லுாரி, மதுரை: கல்லுாரி உதவி பேராசிரியர்கள் இதுபோன்ற உயர் தகுதிகள் பெற்றிருந்தால் தான் மாணவர்களை அதற்கான தரத்திற்கு ஏற்ப உருவாக்க முடியும். உலகளாவிய கல்வி முறைகளை மாணவர்கள் அறிய செய்ய முடியும். உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் அதிகரித்து வருகின்றனர் என்ற எண்ணிக்கையை மட்டும் கணக்கில் கொள்ளக்கூடாது. யு.ஜி.சி.,யின் இதுபோன்ற உத்தரவு உயர்கல்வியின் ஒட்டுமொத்த தரத்தையும் மேம்படுத்த அடிப்படையாக அமையும். தரமான கல்விக்கு இதுபோன்ற விதிமுறைகள் அவசியம்.கற்பித்தல் சாத்தியமாகும்

முனைவர் சத்தியமூர்த்தி, பேராசிரியர், மதுரை காமராஜ் பல்கலை: முனைவர் பட்டத்திற்கு விண்ணப்பிப்போரில் 20 சதவீதம் உரிய காலத்தில் முடிக்கின்றனர். 'நெட்', 'செட்' தகுதி தேர்வுகள் எழுதுபவர்களை விட பிஎச்.டி., படித்தவர்களிடம் ஆழமான கற்றல் கற்பித்தல் திறன் இருக்கும். ஆய்வு அணுகு முறைகள் மற்றும் ஆராய்ச்சி நெறிமுறைகள் குறித்த தெளிவு பெற்றிருப்பர். சர்வதேச இதழ்களில் கட்டுரைகள் பிரசுரிக்க வேண்டும் என்பதால் அதற்கான தரம் முனைவர் பட்டம் முடிப்போரிடம் இருக்கும். இவையெல்லாம் மாணவர்களின் கல்வித்திறனை அதிகரிக்க பயன்படும்.
முனைவர் பட்டம் கட்டாயப்படுத்தப்படுகிறது என்றாலே 'நெட்', 'செட்' தகுதியில் திருப்தியில்லை என்பது தான் அர்த்தம்.தகுதியானவர் கிடைப்பர்
முனைவர் ராம் திவாகர், மதுரை:முனைவர் பட்டம் பெறுவோரின் கற்பிக்கும் முறையில் மாற்றம் தெரியும். பாடத்திட்டங்களை 'அப்ளிகேஷன் ஓரியன்டடு' முறையில் மாணவர்களுக்கு கற்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இப்படிப்பிற்கு நுழைவு தேர்வு உள்ளது. இதன் மூலம் தகுதியானவர்கள் முனைவராக முடியும். பல நாடுகளை சேர்ந்த பல்கலைகள் தொடர்பு கிடைக்கும். இதழ்கள் வெளியீடுகளை படிக்கும் அனுபவத்தால் கற்பித்தல் திறனில் மாற்றம் கொண்டு வரலாம். இது ஆய்வுக்கான களமாகவும் அமையும்.

கற்பிக்கும் முறையில் மாற்றம் : அனந்தகிருஷ்ணன், முன்னாள் துணைவேந்தர்: இந்த முடிவு வரவேற்கத்தக்கது தான். அதேநேரம் பிஎச்.டி., வழிகாட்டிகளின் தரமும் அவசியம். அனைத்து வசதியுடன் கூடிய ஆய்வுக் கூடங்கள் இங்கு குறைவு. சிலர் ஏனோ தானோ என முனைவர் பட்டம் பெற்று விடுகின்றனர். சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளை சரியான ஆய்வுக்கு உட்படுத்துவதில்லை. இதுபோன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்தால் முனைவர் பட்டம் பெற்று உதவி பேராசிரியராக பணியில் சேருவோரின் கற்பித்தல் திறன் தரமானதாக இருக்கும். அதேநேரம் உயர்கல்வி கற்பிக்கும் முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். ஆராய்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்குவிப்பதற்கு ஏற்ப பாடத் திட்டங்களையும் மாற்ற வேண்டும்
'இ - பில்'லுக்கு ரூ.10 தள்ளுபடி : பி.எஸ்.என்.எல்., அதிரடி சலுகை

Added : ஜூன் 20, 2018 00:49


'இ - பில்' பெறும் வாடிக்கையாளர்களுக்கு, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், ஊக்கத்தொகையாக, கட்டணத்தில், 10 ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது.பொதுத்துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்.,க்கு, சென்னையில், 5.5 லட்சம் தரைவழி இணைப்பு; 3.5 லட்சம், 'போஸ்ட் பெய்டு' மொபைல் போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
'கோ கிரீன்' : இவர்கள் பயன்படுத்திய சேவைக்கான கட்டண விபரம், அவர்களின் முகவரிக்கு, மாதந் தோறும் தபால் மூலம் அனுப்பப்படும்.இந்நிலையில், மாதக்கட்டண விபரத்தை, தபால் வழியாக அனுப்புவதை நிறுத்த, பி.எஸ்.என்.எல்., முடிவு செய்தது. அதற்கு பதிலாக, வாடிக்கையாளர்களின், 'பில்' விபரத்தை, 'இ - மெயில்' வாயிலாக, 'இ - பில்'லாக அனுப்ப திட்டமிட்டு, 'கோ கிரீன்' என்ற, புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது.இது குறித்து, பி.எஸ்.என்.எல்., துணை பொது மேலாளர், விஜயாகூறியதாவது:இயற்கையை பாதுகாக்கும் வகையில், பி.எஸ்.என்.எல்., நிறுவனம், 'கோ கிரீன்' என்ற, திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில், 'பேப்பர் பில்'லுக்கு பதில், வாடிக்கையாளர்களின், 'இ - மெயில்' முகவரிக்கு, 'பில்' அனுப்பப்படும்.இதை ஊக்கப்படுத்த, வாடிக்கையாளர்களின், 'பில்' தொகையில், 10 ரூபாய் தள்ளுபடி வழங்குகிறோம். இதுவரை, 40 ஆயிரம் வாடிக்கையாளர்கள், இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.நாங்கள், 100 சதவீதம், 'இ - பில்' வழங்க, முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
நான்கு லட்சம் பில்கள் : இதற்காக, வாடிக்கையாளர்கள் பதிவு செய்த, மொபைல் போன் எண்ணுக்கு, தொடர்ந்து, எஸ்.எம்.எஸ்., அனுப்பிவருகிறோம்.மாதந்தோறும், நான்கு லட்சம் பில்கள் அனுப்பப்படுகின்றன. இவற்றை முற்றிலும், 'இ - பில்'களாக மாற்ற முயல்கிறோம். 'இ - மெயில்' முகவரிஇல்லாதவர்களுக்கு, பேப்பர் பில் அனுப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

மதுரையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை ஓரிரு நாளில் அறிவிப்பு 

dinamalar 20.06.2018

மதுரை: மதுரையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைவது தொடர்பாக ஓரிரு நாளில் மத்திய அரசு அறிவிக்க உள்ளது.

தமிழகத்தில் 'எய்ம்ஸ்' எங்கு அமைய உள்ளது என்பது குறித்து மத்திய அரசு அறிவிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.



தமிழகத்தில் 'எய்ம்ஸ்' எங்கு அமைய உள்ளது என்பது குறித்து மத்திய அரசு அறிவிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 விசாரணை நடத்திய நீதிமன்றம், '2017 ஆகஸ்ட்டிற்குள் மத்திய ஆய்வுக் குழு அமைத்து அது எடுக்கும் முடிவை அறிவிக்க வேண்டும்' என உத்தரவிட்டது. முடிவை அறிவிக்காததால் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு பிப்.,14ல் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் 'எய்ம்ஸ்' தேர்வுக் குழு அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 'எய்ம்ஸ்' அமையும் இடத்தை தேர்வு செய்து ஜூன் 14க்குள் அறிவிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 26 க்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில் 'எய்ம்ஸ்' தேர்வுக்குழு உயர்மட்டக் கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. இதில், 'மருத்துவமனை அமைய ஏற்ற இடம் மதுரைதான்' என முடிவு செய்யப்பட்டுஉள்ளது. இதுகுறித்து ஓரிரு நாளில் மத்திய அரசு அறிவிக்க உள்ளது.
காணாமல் போன பூனைக்கு போஸ்டர் ஒட்டிய பேராசிரியர்

Added : ஜூன் 20, 2018 02:16

கோல்கட்டா: மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் உள்ள கல்லுாரியில், ஆங்கில பேராசிரியராக இருப்பவர், கலோல் ராய். இவர், ஒரு பூனையை, செல்லப் பிராணியாக வளர்த்து வந்தார். சமீபத்தில், அந்த பூனை காணாமல் போனது. பூனையை கண்டுபிடிக்க, கோல்கட்டா நகர் முழுவதும், 'போஸ்டர்' ஒட்டியதுடன், தான் வசிக்கும் பகுதியில், செய்தித் தாள்களுடன், துண்டு பிரசுரத்தையும் சேர்த்து வினியோகிக்க செய்தார். சமூக வலைத்தளத்திலும்,பூனையை கண்டுபிடிக்க உதவும்படி பதிவிட்டுள்ளார்.அதில், பூனை காணாமல் போனதால், தன் தாயின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னால் வேலையில் கவனம்செலுத்த முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பூனையைக் கண்டுபிடித்துதருவோருக்கு பரிசு வழங்கப்படும் என்றும்
அறிவித்துள்ளார்.

'ஜெயலலிதா கொள்ளையடித்த பணம்''திகில்' கிளப்பும் திண்டுக்கல் சீனிவாசன் 


dinamalar

வேடசந்துார்: ''ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் மூலம் பெற்றுக்கொண்டு 18 எம்.எல்.ஏ.,க்கள் துரோகம் செய்கின்றனர்,'' என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 'பகீர்' கிளப்பி உள்ளார்.



'உலகில் பிரிக்கவே முடியாதது எது' என கேட்டால் 'அமைச்சர் சீனிவாசனும் சர்ச்சை பேச்சுக்களும்' என அடித்து கூறலாம். தற்போதைய அரசியலில் 'சர்ச்சை பேச்சுகளின் நாயகன்' இவர். சசிகலா ஆதரவு நிலையில் இருந்த போது, 'மருத்துவமனையில் அம்மா இட்லி, சட்னி சாப்பிட்டார். அதை நாங்கள் பார்த்தோம்' என சத்தியம் செய்தார்.

சசிகலாவை எதிர்த்த பின் 'நாங்கள் யாரும் அம்மாவை பார்க்கவில்லை' என 'திகில்' கிளப்பினார். இதே போல அவ்வப்போது 'திகில், பகீர்' பேச்சுகள் பறக்கும். சில மாதங்கள் அடக்கி வாசித்த அவர் நேற்று முன்தினம், சர்ச்சை பேச்சில் உச்சம் தொட்டுவிட்டார். 'அம்மா கொள்ளையடித்த பணம் தினகரனிடம் உள்ளது'

என பேசி 'நம்பர் ஒன் உளறு வாயர்' என சமூக ஊடகங்களில் பட்டம் வென்று விட்டார்.

காவிரி பிரச்னையில் தமிழக அரசை பாராட்டி அ.தி.மு.க., சார்பில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரில் கூட்டம் நடந்தது. இதில் அவர் பேசியதாவது:

அம்மாவால் கட்சியில் ஒதுக்கிவைக்கப்பட்டவர் தினகரன். அம்மாவால் எம்.எல்.ஏ.,வான 18 பேர் தற்போது அந்த துரோகியுடன் உள்ளனர். அம்மாவால் கேடி, ரவுடி என ஒதுக்கிவைக்கப்பட்ட தினகரனுடன் போனவர்கள் அவரை மகாத்மா காந்தி, புத்தரை போல் பேசுகின்றனர்.

கேப்பையில் நெய் வடிகிறது என்றால் கேட்பவர்களுக்கு எங்கே போச்சு அறிவு. இவர்களால்தான் ஆட்சி நடப்பது போல, 'முதல்வர் பழனிசாமியை நீக்கவேண்டும்' என்றனர். சபாநாயகரிடம் மனுக்களை கொடுத்த பின் அவர் ஒரு மாதம் அவகாசம் கொடுத்தார். அவகாசம் பெற்று மைசூர், அமெரிக்கா என ஜாலியாக சுற்றினர்.

அம்மாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரன் மூலம் பெற்றுக்கொண்டனர். ஸ்டாலினிடமும் பணம் பெற்றுக் கொண்டு ஸ்டாலின் முதல்வர், தினகரன் துணை முதல்வர்,

மற்றவர்கள் எல்லாம் அமைச்சர்கள் என கனவு கண்டனர். இதை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கமுடியுமா? எனவே அவர்களை சபாநாயகர் நீக்கினார். தினகரனால் மாஜி எம்.எல்.ஏ.,க்கள் பலர் நொந்துபோய் விட்டனர்.இவ்வாறு அவர் பேசினார்.

'நான் பேசவில்லை':

திண்டுக்கல்லில் அமைச்சர் சீனிவாசன் கூறியதாவது: வேடசந்துாரில் நடந்த கூட்டத்தில், ஜெ., மறைவிற்கு பின்பு கட்சியை கைப்பற்ற தினகரன் முயற்சி மேற்கொண்டதை பற்றி பேசினேன். 30 ஆண்டுகளுக்கு மேலாக சசிகலா குடும்பத்தினர் ஜெ.,க்கு தெரியாமல் தவறான வழியில் கொள்ளையடித்த பணத்தை வைத்து தினகரன் அரசியல் நடத்தி வருகிறார் என்ற கருத்துப்பட பேசினேன். ஜெ.,பற்றி நான் தவறாக பேசவில்லை. அவரால் வளர்க்கப்பட்ட நான் அதுமாதிரி பேச மாட்டேன். என் மீது சிலர் அவதுாறு பரப்புகின்றனர், என்றார்.

 


Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...