Thursday, August 22, 2019

2020-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு

By DIN | Published on : 22nd August 2019 01:54 PM 

2020 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 3ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மருத்துவ படிப்பில் சேர்வதற்காக தேசிய அளவில் நீட் என்ற பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வின் தேதியை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, நீட் தேர்வு அடுத்தாண்டு மே 3ஆம் தேதி நடைபெறுகிறது.


தேர்வின் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியாகிறது. மேலும் நீட் தேர்வுக்கு மாணவர்கள் வரும் டிசம்பர் 2 முதல் 31-ஆம் தேதி வரை பதிவு செய்ய வேண்டும். மார்ச் 27-ம் தேதி ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு: https://www.nta.ac.in/ என்ற தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ பக்கத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check The Aadhaar card is a vital identification document for Indians. ...