Sunday, August 4, 2019

சிவாச்சாரியார் குடும்பத்திற்கு நிவாரணம்

Added : ஆக 04, 2019 01:08

சென்னை:திருவாரூர் தேரில் இருந்து, கீழே விழுந்து இறந்த, சிவாச்சாரியார் குடும்பத்திற்கு, மூன்று லட்சம் ரூபாய், நிவாரண நிதி வழங்க, முதல்வர், இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர், தியாகராஜ சுவாமி கோவிலில், நேற்று முன்தினம் நடந்த தேரோட்டத்தில், சிவாச்சாரியார் முரளி, 56, நிலை தடுமாறி விழுந்து, இறந்தார்.அவரது குடும்பத்தினருக்கு, தியாகராஜ சுவாமி கோவில் நிதியிலிருந்து, மூன்று லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024