Tuesday, August 6, 2019

ஒரு மாணவர் - ஒரு மரம்' பல்கலை, கல்லுாரிகளுக்கு உத்தரவு

Added : ஆக 06, 2019 03:49


திருப்பூர்:ஒரு மாணவர் - ஒரு மரம்' திட்டத்தைச் செயல்படுத்த, பல்கலை மற்றும் கல்லுாரி நிறுவனங்களின் இயக்குனர்களுக்கு, யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.

யு.ஜி.சி., என்ற, பல்கலை மானியக் குழுவின் செயலர், ரஜ்னீஸ் ஜெயின், நாடு முழுவதும் உள்ள, பல்கலை துணைவேந்தர் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் இயக்குனர்களுக்கு அனுப்பிய கடிதம்:உயர்கல்வி நிறுவனங்கள், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.சுற்றுச்சூழல் காப்பதற்கும், மாசுக் கட்டுப்பாட்டைத் தடுப்பதற்கும், மரங்கள் நடுவதே சிறந்த வழி. 2015ல், 'ஒரு மாணவர் - ஒரு மரம்' என்ற திட்டத்தை, பல்கலை, உயர் கல்வி நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படுத்தின.அதே முறையில், இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த, பல்கலை மற்றும் கல்லுாரிகள், தங்களிடம் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.ஒரு மாணவர், குறைந்தபட்சம், ஒரு மரத்தையாவது நட்டு, பாதுகாக்க வேண்டும். தண்ணீர் சேமிக்கவும், அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.மத்திய மனித வளத் துறை அமைச்சர், ரமேஷ் போக்ரியால், மரம் நடுதல் மற்றும் தண்ணீர் வளம் பாதுகாத்தலை, ஒரு இயக்கமாக மேற்கொள்ள வலியுறுத்தி, 'வீடியோ' வெளியிட்டுள்ளார்.environment preservation77@gmail.com என்ற, 'இ - மெயில்' முகவரிக்கு, மரம் நடுதல் மற்றும் தண்ணீர் வளம் பாதுகாப்பு தொடர்பான புகைப்படங்களை, பல்கலை மற்றும் கல்லுாரிகள் அனுப்பலாம்.இவ்வாறு, ரஜ்னீஷ் ஜெயின், அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுஉள்ளது.

No comments:

Post a Comment

Coimbatore-Mayiladuthurai Jan Shatabdi Express service with LHB coaches launched

Coimbatore-Mayiladuthurai Jan Shatabdi Express service with LHB coaches launched The Southern Railway began operating the service on Saturda...