அரசாணை பதிவேற்றம் செய்யாமல் அரசின் திட்டம் அறிய முடியாத நிலை
Added : ஆக 06, 2019 01:57
மாநில அரசு துறைகளில் வெளியாகும் அரசாணைகள், அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை. இதனால், அரசின் திட்டங்களை அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது.
தமிழகத்தில், அனைத்து அரசு துறைகளும், கணினி மயமாக்கப்பட்டு உள்ளன. துறையில் உள்ள, அனைத்து ஆவணங்களும், கணினியில் ஏற்றப்படுகின்றன. பிறப்பு, இறப்பு சான்றிதழ் உட்பட, பல்வேறு சான்றிதழ்கள், 'ஆன்லைன்' வழியே வழங்கப்படுகின்றன.எனினும், பெரும்பாலான துறைகளில், மக்களுக்கு தேவையான சேவைகளை, ஆன்லைனில் வழங்க, அரசு அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், அனைத்து துறைகளின் அரசாணைகள், மக்கள் அறிந்து கொள்வதற்காக வெளியிடப்படுவது வழக்கம்.மக்கள் பார்வைசமீப காலமாக பெரும்பாலான துறைகள், அரசாணைகளை, இணையதளத்தில் வெளியிடுவதில்லை. முதல்வர் வசம் உள்ள பொதுப்பணித் துறையில், இந்த ஆண்டு வெளியான அரசாணைகளில், ஒன்று மட்டும் வெளியாகி உள்ளது. தமிழில், 2011க்கு பின், எந்த அரசாணையும் பதிவேற்றம் செய்யப்படவில்லை.நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், ஆங்கிலம் மற்றும் தமிழில், இந்த ஆண்டு, ஒரு அரசாணை கூட, மக்கள் பார்வைக்கு தரப்படவில்லை.பாலங்கள் கட்ட நிதி ஒதுக்கப்படுகிறது; நிலம் எடுக்கப்படுகிறது. இதுதொடர்பான எந்த அரசாணையையும், மக்கள் அறிய முடியவில்லை.
துணை முதல்வர் வசம் உள்ள, வீட்டுவசதித் துறையில், ஆங்கிலத்தில் சில அரசாணைகள், இந்த ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், தமிழில், 2011க்கு பின்; ஆங்கிலத்தில், 2006க்கு பின், இணையதளத்தில், ஒரு அரசாணை கூட இடம்பெறவில்லை.வெளியாகவில்லைவருவாய் துறையில், இரண்டு ஆண்டுகளாகவும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், நான்கு ஆண்டுகளாகவும், ஒரு அரசாணை கூட, அரசு இணையதளத்தில் வெளியாகவில்லை.அரசு செய்யும் பணிகள் அனைத்தையும், மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, அரசு இணையதளம் துவக்கப்பட்டது. அதில் வெளிப் படைத்தன்மை இல்லாததால், இணையதளம் இருந்தும் பயனில்லாத நிலை உள்ளது.
- நமது நிருபர் -

No comments:
Post a Comment