மருத்துவ படிப்புகளில் சேர இன்று இறுதி கட்ட கவுன்சிலிங்
Added : ஆக 07, 2019 01:25
சென்னை:எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான, இறுதி கட்ட கவுன்சிலிங், இன்று நடக்கிறது.
தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீட்டில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இரண்டு கட்டங்களாக முடிந்துள்ளது. இடங்கள் ஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கு, முதலாம் ஆண்டு வகுப்புகளும் துவங்கி உள்ளன.
இடங்கள் ஒதுக்கீடு பெற்ற சிலர் கல்லுாரியில் சேரவில்லை; கல்லுாரியில் சேர்ந்த சிலர், படிப்பை கைவிட்டுள்ளனர்.அந்த வகையில், தனியார் மருத்துவ கல்லுாரியில், அரசு ஒதுக்கீட்டில், 17; ராஜா முத்தையா கல்லுாரியில், இரண்டு என, 19 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மற்றும் சென்னை அரசு பல் மருத்துவ கல்லுாரியில், ஆறு பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன.
இந்த இடங்களை நிரப்புவதற்கான, இறுதிகட்ட, 'மாப் - ஆப்' கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், இன்று நடக்கிறது. மேலும் விபரங்களை, www.tnhealth.org www.tnmedicalselection.org என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment