Thursday, August 8, 2019

காஞ்சிபுரம் சென்ற பக்தர்களை திருப்பி அனுப்பிய போலீசார்

Added : ஆக 08, 2019 00:03

விழுப்புரம் : காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிக்க, நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகளவில் குவிந்ததால், தென் மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்களின் வாகனங்களை, விழுப்புரம் போலீசார், திருப்பி அனுப்பினர்.

காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசனம் செய்ய, நேற்று முன்தினம், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். சுவாமி தரிசனம் செய்ய, 10 மணி நேரத்திற்கும் மேலானது.இதையடுத்து, காஞ்சி புரத்திற்கு வரும் பக்தர்களுக்கு, அங்குள்ள கூட்ட நெரிசல் குறித்து தெரிவிக்க, விழுப்புரம் மாவட்ட போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.இதன்படி, விழுப்புரம் மாவட்ட போலீசார், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, 'டோல்கேட்'களில், வேன், கார் மற்றும் பஸ் உள்ளிட்ட வாகனங்களை ஆய்வு செய்தனர். அதில், காஞ்சிபுரம் செல்லும் பக்தர்களிடம், அங்குள்ள கூட்ட நெரிசல் குறித்து தெரிவித்தனர்.

மதுரை, திருச்சி, துாத்துக்குடி, தேனி, நாமக்கல், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த வாகனங்களை, உளுந்துார்பேட்டை டோல்கேட்டில் தடுத்து, திருப்பி அனுப்பினர்.சேலம், ஈரோடு, கோவை பகுதிகளில் இருந்து வந்த வாகனங்களை, கள்ளக்குறிச்சி மாடூர் டோல்கேட்டில் நிறுத்தி, திருப்பி அனுப்பினர். இதனால், நீண்ட துாரத்தில் இருந்து வந்த பக்தர்கள், வேறு கோவில்களுக்கு செல்வதாக கூறிச் சென்றனர்.

No comments:

Post a Comment

Spl stray counselling round announced for MBBS, BDS

Spl stray counselling round announced for MBBS, BDS  TIMES NEWS NETWORK 17.11.2024  Chennai : The Medical Counselling Committee under the Di...