Friday, August 2, 2019

யு.ஜி.சி., எச்சரிக்கை:உரியகல்வித்தகுதி இல்லாதவர்களை பேராசிரியர்களாக நியமிக்க கூடாது

Added : ஆக 02, 2019 00:46

சென்னை:'உரிய கல்வித்தகுதி இல்லாதவர்களை, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் பேராசிரியர்களாக நியமனம் செய்யக்கூடாது' என்று, பல்கலைமானிய குழுவான,யு.ஜி.சி., கட்டுப்பாடு விதித்துள்ளது.

யு.ஜி.சி., சுற்றறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது:உயர்கல்வி நிறுவனங்களில், அனைத்து மாணவர்களுக்கும், தரமான கல்வியை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், பல பல்கலைகளில் கல்வித்தரம், உள்கட்டமைப்பு வசதிகளில் குறைபாடுகள் உள்ளதாக, புகார்கள் எழுந்துள்ளன.குறிப்பாக, யு.ஜி.சி., குறிப்பிட்டுள்ள கல்வி தகுதியை பெறாதவர்களை, பல கல்வி நிறுவனங்கள் பேராசிரியர் பணியில் சேர்த்துள்ளதாகவும், குறைந்த ஊதியம் காரணமாக, இந்த நியமனங்களை மேற்கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.எனவே, யு.ஜி.சி.,யின் விதிகளை, உயர்கல்வி நிறுவனங்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 16.11.2024