Friday, August 2, 2019

மருத்துவ மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

Added : ஆக 02, 2019 01:13


சென்னை:அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, நேற்று வகுப்புகள் துவங்கின.

 புதிய மாணவர்களுக்கு மூத்த மாணவர்கள், பூங்கொத்து கொடுத்து, உற்சாக வரவேற்பு அளித்தனர்.தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரி களில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்த, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள், நேற்று துவங்கின. சென்னை மருத்துவ கல்லுாரிக்கு வந்த புதிய மாணவர்களை, மூத்த மாணவர்கள், பூங்கொத்து கொடுத்தும், ரோஜா மலர் கொடுத்தும் வரவேற்றனர்.சென்னை மருத்துவ கல்லுாரியில் நடந்தநிகழ்ச்சியில், டீன் ஜெயந்திபேசியதாவது:சென்னை மருத்துவ கல்லுாரியில், 'ராகிங்' முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை, ராகிங் நடந்ததாக புகார்கள் இல்லை. 'சீனியர்' மாணவர்கள், முதலாம் ஆண்டு மாணவர்களுடன், நல்லுறவை ஏற்படுத்தும் வகையிலும், 'ராகிங்' நடப்பதை தடுக்கும் வகையிலும், குழு அமைக்கப்பட்டுள்ளது.அந்த குழுவில் உள்ள மாணவர்கள், ராகிங்கில் ஈடுபடும் மாணவர்களை கண்காணிப்பர். இதில், அவர்கள் தவறு செய்தது தெரிய வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

சென்னை கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, ஓமந்துாரார் அரசு மருத்துவ கல்லுாரிகளிலும், முதலாம் ஆண்டு மாணவர்களை, சீனியர் மாணவர்கள் வரவேற்றனர். மலர் கொடுத்தும், மரக்கன்றுகள் நடச்செய்தும், புதிய மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.தமிழகம் முழுவதும், அரசு மருத்துவ கல்லுாரிகளில் நடந்த நிகழ்ச்சியில், 'ராகிங் செய்ய மாட்டோம்' என, சீனியர் மாணவர்கள், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வாக்குறுதி அளித்தனர். மேலும், விடுதிகள், அங்கு அளிக்கப்படும் உணவுகள் தரமானதாக இருக்கும் என, பெற்றோர்களிடம், விடுதி காப்பாளர்கள் உறுதி அளித்தனர்.

ஒரு மாதம் பயிற்சி

இந்திய மருத்துவ கவுன்சில், நாடு முழுவதும், ஒரே பாடத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த பாடத்திட்டம் தொடர்பாக, பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி, முதலாம் ஆண்டின் துவக்கத்தில், ஒரு மாதத்திற்கு, மருத்துவமனையில், பயிற்சி பெற வாய்ப்பு தரப்படுகிறது.இதில், நோயாளிகளை எப்படி அணுகுவது, ஒருடாக்டராக, அவர்களை புரிந்து பணியாற்றுவதுஉள்ளிட்டவை குறித்து கற்பிக்கப்படும்.நாராயண பாபு,மருத்துவ கல்வி இயக்குனர்'ராகிங்' குறித்து புகார் செய்யலாம் ராகிங் குறித்து, கல்லுாரி டீன்கள் அல்லது கல்லுாரிகளில் உள்ள, ராகிங் தடுப்பு குழுவினரிடம் புகார் அளிக்கலாம் எம்.சி.ஐ., எனப்படும், இந்திய மருத்துவ கவுன்சிலில், ராகிங் தடுப்புக்கான ஒழுங்குமுறை கமிட்டி உள்ளது.
இந்த ராகிங் தடுப்பு ஒழுங்குமுறை குழுவை, 18001 11154 என்ற இலவச எண்ணிலும், 011 - 2536 7033, 2536 7035, 2536 7036 என்ற எண்களிலும், தொடர்பு கொள்ளலாம்* மேலும், mci@bol.net.in, contact@mciindia.org என்ற, இ - மெயில் முகவரிகள் மற்றும்,www.mciindia.orgஎன்ற இணையதளத்திலும், புகார் தெரிவிக்கலாம். சிறப்பு அவசர உதவிக்கான, 011 - 2536 1262 என்ற எண்ணிலும், antiragging-mci@nic.in என்ற, இ - மெயிலிலும், மருத்துவ மாணவர்கள் புகார் தெரிவிக்கலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 16.11.2024