Friday, August 2, 2019

உணவு பட்டியலில், 'ஐயர் சிக்கன்': பிராமணர்கள் எதிர்ப்பு

Added : ஆக 02, 2019 02:45

மதுரை:மதுரையில் உள்ள, ஓட்டல் ஒன்றில், 'கும்பகோணம் அய்யர் சிக்கன்' என, சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக, அசைவ உணவுக்கு பெயர் சூட்டப்பட்டிருந்தது. பிராமணர்களின் போராட்டத்தை அடுத்து, அந்த உணவின் பெயர் நீக்கப்பட்டதுடன், ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கடிதமும், எழுதி கொடுத்தார்.

மதுரை, வடக்கு மாசி வீதியில், 'மிளகு' என்ற ஓட்டல் உள்ளது. இங்கு, வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் உணவு பட்டியலில், 'கும்பகோணம் அய்யர் சிக்கன்' என்ற பெயர் இருந்தது.மேலும், இது குறித்து, இணையதளங்களில், விளம்பரமும் செய்தனர். ஜாதி துவேஷத்துடன், அசைவ உணவுக்கு பெயர் சூட்டப்பட்டிருந்தது.இந்த உணவு பெயரை கண்டித்து, பிராமணர்கள் நேற்று மாலை, அந்த ஓட்டலை முற்றுகையிட்டனர்.இதையடுத்து, ஓட்டல் மேலாளர், டுவிக் என்பவர், 'தவறுக்கு வருந்துகிறோம். சர்ச்சைக்குரிய, அந்த பெயர், உடனே நீக்கப்படும்' என, தெரிவித்தார்.மேலும், எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கடிதம் தர, ஓட்டல் உரிமையாளர் ஒப்புக்கொண்டதால், போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024