Friday, August 2, 2019

துணைவேந்தர் பதவியில் பிரதிநிதித்துவம்திருமாவளவன் வழக்கில் ஆக.5 தீர்ப்பு

Added : ஆக 02, 2019 00:56

சென்னை:பல்கலை துணை வேந்தர், சிண்டிகேட் மற்றும் செனட் உறுப்பினர்கள் நியமனங்களில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கு, உரிய பிரதிநிதித்துவம் அளிக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், திருமாவளவன், எம்.பி., மனு தாக்கல் செய்துள்ளார்.
இவ்வழக்கில், இரு தரப்பு வாதங்கள் முடிந்து, தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

விருப்பப்படி நியமனம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவன் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில், ௨௧ பல்கலை கழகங்கள் உள்ளன. மூன்று ஆண்டுகளாக, ஒன்பது துணைவேந்தர், எட்டு பதிவாளர், ௧௦ தேர்வு கட்டுப்பாட்டாளர் பதவிகள் காலியாக உள்ளன. பல்கலைகளுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் போது, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மகளிருக்கு, உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவது இல்லை.மக்கள் தொகைக்கு ஏற்ப, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரில் இருந்து, ஐந்து; மகளிரில் இருந்து, ஏழு; இதர சமூகத்தினரில் இருந்து, ஐந்து என, துணைவேந்தர் பதவிகளில் நியமனம் இருக்க வேண்டும். ஆட்சிமன்ற குழு, சிண்டிகேட், செனட் அமைப்புகளுக்கும், விருப்பப்படி நியமனம் நடக்கிறது.
உரிய பிரதிநிதித்துவம்

குறைந்தபட்ச பிரதிநிதித்துவம் கூட, ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர், மகளிருக்கு வழங்கப்படவில்லை. உரிய பிரதிநிதித்துவம் வழங்க கோரி, 2017 ல், பல்கலை மானியக் குழு, கவர்னரின் முதன்மை செயலர், உயர் கல்வித் துறை முதன்மை செயலர் ஆகியோருக்கு மனு அனுப்பினேன்; எந்த பதிலும் இல்லை.எனவே, துணை வேந்தர், ஆட்சி மன்றக் குழு, நிர்வாக குழு, சிண்டிகேட், செனட் குழுக்களில், ஆதிதிராவிடர், பழங்குடியினர்,சிறுபான்மையினர், மகளிருக்கு, உரிய பிரதிநிதித்துவம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. திருமாவளவன் தரப்பில், வழக்கறிஞர் பழனிமுத்து, அரசு தரப்பில், சிறப்பு பிளீடர் கதிர்வேலு ஆஜராகினர். இரு தரப்பு வாதங்களும் முடிந்து, வழக்கின் உத்தரவை, வரும், 5ம் தேதிக்கு, டிவிஷன் பெஞ்ச் தள்ளி வைத்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 16.11.2024