உ.பி., பல்கலையில் 'ராகிங்' கொடுமை
Added : ஆக 21, 2019 23:01
சாய்பாய், உத்தர பிரதேச மருத்துவ பல்கலை கழகத்தில், முதலாமாண்டு மாணவர்கள், 150 பேருக்கு, மொட்டை அடித்து, ஊர்வலமாக அழைத்து சென்று, 'ராகிங்' செய்த சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, எடாவா மாவட்டத்தில் உள்ள சாய்பாய் கிராமத்தில், உ.பி., மருத்துவ பல்கலைசெயல்பட்டு வருகிறது.இங்கு, மருத்துவப் படிப்புக்கான முதலாமாண்டு வகுப்புகள், சமீபத்தில் துவங்கின. இந்நிலையில், முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள், 150 பேருக்கு மொட்டை அடித்து, 'சீனியர்' மாணவர்கள், அவர்களை ஊர்வலமாக அழைத்து சென்று, ராகிங் செய்தனர்; அவர்களை 'சல்யூட்' அடிக்க வைத்து நிர்ப்பந்தம் செய்தனர்.இந்த 'வீடியோ' சமூகவலைதளங்களில் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து, பல்கலையின் துணை வேந்தர், ராஜ் குமார் கூறியதாவது:பல்கலை வளாகத்தில், 'ராகிங்' கொடுமைகளை கண்காணிக்க, தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது போன்ற புகார்களை கையாள, ராகிங் எதிர்ப்பு கமிட்டி செயல்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment