மோசடி போன் அழைப்பு எஸ்.ஐ.,யே ஏமாறலாமா
Added : ஆக 17, 2019 23:28
துாத்துக்குடி, வங்கியிலிருந்து பேசுவாதக கூறி, எஸ்.ஐ.,யிடம், 30 ஆயிரம் ரூபாய் பண மோசடி செய்யப்பட்டது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் காவல் நிலையத்தில், சிறப்பு, எஸ்.ஐ., ஆக இருப்பவர், பாபு ராஜ். 31ம் தேதி, இவரது மொபைல் போனுக்கு வந்த அழைப்பில், ஹிந்தி கலந்த தமிழில் பேசிய, மர்ம நபர் ஒருவர் பேசினார்.அவர், திருச்செந்துாரில் உள்ள, அரசுடமையாக்கப்பட்ட வங்கியிலிருந்து பேசுவதாக கூறியுள்ளார். பின், 'உங்கள் வங்கி கணக்கில், ஆர்தர் எண்ணை இணைக்க வேண்டும்' எனக் கூறிய மர்ம நபர், அவரிடம் இருந்து, ஓ.டி.பி., என்ற, ஒரு முறை கடவு எண்ணையும், கேட்டுள்ளார்.அதை நம்பிய, எஸ்.ஐ., தன் மொபைல்போனிற்கு வந்த, கடவு சொல் எண்ணை தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, எஸ்.ஐ.,யின் வங்கிக் கணக்கிலிருந்து, 30 ஆயிரம் ரூபாயை, மர்மநபர், 'அபேஸ்' செய்துள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த, எஸ்.ஐ., பாபுராஜ், மாவட்ட குற்றப்பிரிவில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:
Post a Comment