Saturday, August 10, 2019

தங்க கம்மலை விழுங்கிய கோழி; அறுவை சிகிச்சை செய்து காப்பாற்ற முயன்றபோது உயிரிழப்பு: சென்னையில் நடந்த பாசப் போராட்டம் 


தங்க கம்மலை விழுங்கிய கோழி.

சென்னை

தங்க கம்மலை விழுங்கிய கோழியை அறுவை சிகிச்சை செய்து காப்பாற்ற முயன்றபோது உயிரிழந்தது.

சென்னை புரசைவாக்கம் நெல் வயல் லேன் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். திருமணமான இவ ருக்கு குழந்தை இல்லை. அதனால், கடந்த ஆண்டு ஒரு நாட்டுக்கோழியை வாங்கி, அதற்கு பூஞ்சி என்று பெயரிட்டு பாசமாக வளர்த்து வந்தார். இவரது அக்காள் மகளும், ஐஏஎஸ் படிப்பவருமான தீபாவும் கோழி மீது அதிகம் பாசம் காட்டி வந்துள்ளார். கோழியும் தீபாவையே சுற்றிக் கொண்டு இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 4-ம் தேதி தான் அணிந்திருந்த தங்க கம் மலை கழட்டி வைத்துவிட்டு தீபா தலைவாரிக் கொண்டிருந்தார். அப்போது, அவரை சுற்றி வந்த கோழி கம்மலை இரை என நினைத்து கொத்தி விழுங்கியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தீபா, வீட்டில் உள்ளவர்களிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இதை யடுத்து, அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள கால்நடை டாக்டரிடம் கோழியை தூக்கிச் சென்றனர்.

எனக்கு கம்மல் முக்கியமில்லை. கோழியின் உயிர்தான் முக்கிய மென டாக்டரிடம் தீபா அழுதுள் ளார். அவரை சமாதானம் செய்த டாக்டர் கோழியை எக்ஸ்ரே எடுத் துப் பார்த்ததில், கோழியின் இரைப் பையில் கம்மல் இருப்பது தெரிய வந்தது. அறுவை சிகிச்சை செய்து கம்மலை வெளியே எடுத்துவிடலாம் என டாக்டர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கடந்த 8-ம் தேதி அறுவை சிகிச்சைக்காக கோழியு டன் சிவக்குமார் சென்றார். கோழிக்கு மயக்க மருந்து கொடுத் தும், செயற்கை சுவாசம் அளித்தும் டாக்டர் அறுவை சிகிச்சையைத் தொடங்கினார். அரை மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சையில் கோழியின் இரைப்பையில் குத்திக் கொண்டு இருந்த கம்மலை டாக்டர் எடுத்தார். ஆனால், கோழி பரிதாபமாக உயிரிழந்தது.

இரைப்பையில் கம்மல் குத்தி காயம் ஏற்பட்டதால் கோழி உயிரி ழந்துவிட்டதாக டாக்டர் தெரிவித் தார். இதைக் கேட்ட சிவக்குமார் கதறி அழுதபடி, கோழியை வீட் டுக்கு தூக்கிச் சென்றார். வீட்டில் இருந்த தீபாவும் கோழியை பார்த்து கதறி அழுதுள்ளார். பின்னர், உயிரிழந்த கோழியை அடக்கம் செய்தனர்.

தங்க கம்மலை விழுங்கிய கோழிஅறுவை சிகிச்சைகோழி உயிரிழப்பு

No comments:

Post a Comment

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check The Aadhaar card is a vital identification document for Indians. ...