Monday, October 7, 2019

நெல்லை, பொதிகை ரயில் கடற்கரை வரை இயக்கப்படுமா?

Added : அக் 06, 2019 23:38

சென்னை : 'பொதிகை, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களை, சென்னை கடற்கரை ரயில் நிலையம் வரை இயக்க வேண்டும்' என, செங்கோட்டை பயணியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு, செங்கோட்டை ரயில் பயணியர் சங்க செயலர், கிருஷ்ணன் அனுப்பியுள்ள கோரிக்கை மனு: சென்னை, எழும்பூர் ரயில் நிலைய நான்காவது பிளாட்பாரத்தில், பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால், எழும்பூர் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ், செங்கோட்டைக்கு இயக்கப்படும், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள், வரும், 10ம் தேதியில் இருந்து, டிசம்பர், 7 வரை, தாம்பரத்துடன் நிறுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மற்றும் செங்கோட்டையில் இருந்து இந்த ரயில்கள், எழும்பூருக்கு இயக்கப்படும் போது, தினமும், 'ஹவுஸ்புல்'லாக செல்கின்றன. இந்த ரயில்களில் வரும் பயணியர், காலை நேரத்தில் தாம்பரத்தில் இறங்கி, சென்னை நகருக்குள் வர, சிரமப்படும் நிலை ஏற்படும். பயணியர் நிலை கருதி, இந்த ரயில்களை, தாம்பரத்தில் இருந்து சேத்துப்பட்டு வரை, எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் இயக்கி, பின், புறநகர் மின்சார ரயில் பாதையில், கடற்கரை நிலையம் வரை இயக்கினால், பெரும் உதவியாக இருக்கும்.

இந்த ரயில்களில், 10ம் தேதிக்கு பின், பயணம் செய்ய முன்பதிவு செய்திருப்போர், எழும்பூர் வரை பயண கட்டணம் செலுத்தி இருப்பர். அவர்களுக்காக தாம்பரத்தில் இருந்து எழும்பூர் வரை, புறநகர் மின்சார சிறப்பு ரயில் இயக்கினால் உதவியாக இருக்கும்.இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Devising a foolproof system to ensure credibility of NEET

Devising a foolproof system to ensure credibility of NEET  Recommendations suggested by a seven-member committee to reform the exam have met...