சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே!
Added : அக் 07, 2019 00:04
சரஸ்வதி பூஜையான இன்று கலைமகளை இந்த பாடல்களால் வழிபடலாம். மூவுலகை படைத்து காக்கும் கலைவாணியே! கவிதை புனையும் ஆற்றல் அளிப்பவளே! மூங்கில் போன்ற தோள்களைக் கொண்டவளே! குயில் போல இனிய குரல் பெற்றவளே! நிலவொளி போல ஒளிமுகம் கொண்டவளே! வெள்ளைத் தாமரை மலரில் வீற்றிருப்பவளே! எங்களுக்கு வெற்றியைத் தந்தருள வேண்டும். அறுபத்து நான்கு கலைகளையும் அருள்பவளே! பிரம்மதேவரின் விருப்பத்திற்குரியவளே! வேதம் நான்கிற்கும் தாயாக திகழ்பவளே! குளிர்ச்சி மிக்க முத்து மாலை அணிந்தவளே! அறிஞர்களால் போற்றப்படுபவளே! மயில் போன்ற சாயல் கொண்டவளே! சரஸ்வதி தேவியே! உம்மை வணங்குகிறோம்.
அறியாமை இருளை போக்குபவளே! வேத முடிவாகத் திகழ்பவளே! உண்மை வழி நடப்போரின் உள்ளத்தில் வாழ்பவளே! மான் போன்ற விழிகளைக் கொண்டவளே! சிந்தைக்கு இனியவளே! எங்களுக்கு நல்ல புத்தியும், அறிவுத் திறமையும் தர வேண்டும். சுவடியைக் கையில் தாங்கியவளே! அன்னப்பறவை மீது அமர்ந்தவளே! வீணை இசையில் தேர்ந்தவளே! புலவர்களின் நாவில் குடியிருப்பவளே! பாட்டிலும், இசையிலும் விருப்பம் கொண்டவளே! எங்களுக்கு மதிநுட்பத்தை தந்தருள்வாயாக.
நவராத்திரியில் சரஸ்வதியை வழிபடும் கடைசி மூன்று நாட்களும், கோயில், வீடுகளில் வீணை வழிபாடு செய்வர். இதற்கு காரணம் தெரியுமா? 'நவரத்னமாலா' என்ற ஸ்தோத்திரத்தில், காளிதாசர், பராசக்தியின் கையில் வீணை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவள் எப்போதும் சங்கீத இனிமையில் லயித்து இருப்பதாகவும், மிருதுவான மனதுடன் பக்தர்களுக்கு அருள்புரிவதாகவும் கூறியுள்ளார். வீணை ஏந்திய அம்பிகையை 'சியாமளா' என அழைப்பர். இன்னிசையால் வழிபட்டு அவளை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்னும் அடிப்படையில் நவராத்திரியின் போது, வீணை இசை வழிபாடு நடத்துகின்றனர்.
வீட்டில் சரஸ்வதி பூஜை
சரஸ்வதி பூஜையின் போது பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். மேஜை வைத்து அதன் மேல் வெள்ளைத்துணியை விரித்து சரஸ்வதி படம் அல்லது மஞ்சளில் பிடித்த சரஸ்வதி முகத்தை வைக்க வேண்டும். வெண்தாமரை அல்லது வெண்ணிற மலர்களைச் சூட்டி அலங்கரிக்க வேண்டும். மேஜையின் ஒருபுறத்தில் குழந்தைகளின் பாடப்புத்தகங்களை அடுக்க வேண்டும். மறுபுறத்தில் வாழை இலையில் சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், அவல், பொரி, கடலை, நாட்டுச் சர்க்கரை, தேங்காய், வாழைப்பழங்களை படைக்க வேண்டும். இலையின் அருகில் சாணப்பிள்ளையாரும், செம்மண்ணில் பிடித்த அம்மனையும் வைக்க வேண்டும்.
முதலில் விநாயகருக்கும், அடுத்து செம்மண் அம்மனுக்கும் தீபாராதனை காட்ட வேண்டும். பிறகு சரஸ்வதியை பூஜிக்க வேண்டும். பூஜையின் முடிவில் சரஸ்வதி போற்றி, சரஸ்வதி அந்தாதி, சகலகலாவல்லி மாலை போன்ற பாடல்களைப் பாட வேண்டும். மாலையிட்ட மங்கை சுயம்வரத்தின் போது நிடதநாட்டு மன்னன் நளனுக்கு மாலையிட விரும்பினாள் தமயந்தி. ஆனால் பேரழகியான அவளை அடைய விரும்பிய இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், நளன் போல உருமாறி சுயம்வரத்தில் பங்கேற்றனர். மண்டபம் எங்கும் நளனாக இருப்பது கண்ட தமயந்தி திகைத்தாள். உண்மையான நளனை அறிய முடியாமல் தவித்த போது சரஸ்வதி தேவி புத்தியில் புகுந்தாள். 'வானுலக தேவர்களின் கால்கள் தரையில் படாது' என்ற உண்மையை உணர்த்தி வழிகாட்டினாள். நளனின் கால்கள் தரையில் படுவதைக் கண்ட தமயந்தி, மணமாலையைச் சூட்டி மகிழ்ந்தாள்.
வேதாரண்யம் சிவன் கோயிலில் சரஸ்வதி வீணை இல்லாமல் காட்சி தருகிறாள். இங்கு உள்ள அம்பிகையின் குரல் இனிமை கேட்ட சரஸ்வதி வீணை இல்லாமல் இருப்பதாக ஐதீகம். ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் வீணை இல்லாத சரஸ்வதிக்கு சன்னதி உள்ளது. சரஸ்வதியின் பிறந்த நட்சத்திரம் மூலம். சொல்லின் செல்வன் என போற்றப்படும் அனுமனும் இதே நட்சத்திரம் தான். அன்ன வாகனத்தில் வீற்றிருக்கும் சரஸ்வதியை வடமொழியில் 'ஹம்ச வாகினி' என்பர். தமிழில் 'அம்சவல்லி' என குறிப்பிடுவர். மயிலில் இருக்கும் சரஸ்வதிக்கு 'மயூர வாகினி' என பெயர்.
பிரம்மாவின் நாக்கில் சரஸ்வதி குடியிருக்கிறாள். இதனால் 'நாமகள், வாக்தேவி' என்றும் பெயருண்டு. சீவக சிந்தாமணி காப்பியத்தில் 'நாமகள் இலம்பகம்' என்ற பகுதி உள்ளது.
ரகசியம்
தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி ஞானம் அருள்பவர்கள். இதன் அடையாளமாக இருவரின் கையிலும் வெண்ணிற ஸ்படிகமாலை தாங்கியிருப்பர். சரஸ்வதி அந்தாதியைப் பாடியவர் கம்பர். இவருக்காக சரஸ்வதி கிழங்கு விற்கும் பெண்ணாக மனிதவடிவில் வந்தாள். அரியலுார் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் இருக்கும் சரஸ்வதி, ஞானம் தருபவளாக விளங்குகிறாள். அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தரும் இவளின் வலதுகையில் ஆள்காட்டி விரல் மேல்நோக்கி நீட்டியபடி 'சூசி' முத்திரையுடன் உள்ளது.
'கடவுளைப் பற்றி அறிவதே மேலானது' என்பது இதன் பொருள். சாந்த முகத்துடன் மார்பில் பூணுால், கைகளில் ஜபமாலை, கமண்டலம், சுவடி, வளையல்கள் என கலைநயத்துடன் யோகநிலையில் ஆழ்ந்திருக்கும் இவளை வழிபட்டால் நல்லபுத்தி, ஆன்மிக ஞானம் உண்டாகும்.

No comments:
Post a Comment