சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தில் 50 % தள்ளுபடி
Updated : ஜன 12, 2020 09:44
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் பயணச்சீட்டில் 50 சதவீதம் கட்டண தள்ளுபடி வழங்கப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஜன.,15,16,17 ஆகிய தேதிகளில் சென்னை மெட்ரோ ரயில் பயணச்சீட்டுகளில் 50 சதவீதம் கட்டண தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. அரசு பொது விடுமுறை நாள் என்பதால் கட்டண சலுகை வழங்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜன.,17 அன்று காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா கடற்கரையிலிருந்து மெட்ரோ ரயில் நிலையம் வரை பயணிகளுக்கு கேப் (CAB) இயக்கப்படும். அரசினர் தோட்டம், டிஎம்எஸ் ரயில் நிலையங்களில் இருந்து மெரினா கடற்கரைக்கு கேப் இயக்கப்படும் எனவும், காணும் பொங்கல் அன்று மெரினாவுக்கு அதிக அளவில் மக்கள் வருவார்கள் என்பதால் கேப் இயக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment