Sunday, January 12, 2020

ரேஷனில் ரூ.1,000 மற்றும் பொங்கல் பரிசு வழங்கும் பணி நாளை முடிவு

Added : ஜன 12, 2020 00:28

சென்னை: ரேஷன் கடைகளில், 1,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய, பொங்கல் பரிசு வழங்கும் பணி, நாளையுடன் முடிவடைகிறது.

தமிழக ரேஷன் கடைகளில், 2 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. அதில், 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை; தலா, 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலம்; கரும்பு, 1,000 ரூபாய் பணம் அடங்கும். 'பொங்கல் பரிசு வழங்கும் பணியை, ஜனவரி, 9ல் துவங்கி, 12ம் தேதிக்குள் முடிக்குமாறும், விடுபட்டவர்களுக்கு, 13ல் வழங்கி, அந்த பணியை முடிக்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு, உணவு துறை உத்தரவிட்டுஉள்ளது.

அதன்படி, அனைத்து ரேஷன் கடைகளிலும், பொங்கல் பரிசு வழங்கும் பணி, 9ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு கடையிலும், தினமும், 300 - 400 கார்டுகளுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்காக, 10ம் தேதி, ரேஷன் கடைகளுக்கு விடுமுறையாக இருந்தாலும், அவை செயல்பட்டன. இன்றும், அவை செயல்படுகின்றன. நேற்று மாலை வரை, 1.70 கோடி கார்டுகளுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு உள்ளது. ரேஷனில், பொங்கல் பரிசு வாங்க, அரசு வழங்கிய அவகாசம், நாளை மாலையுடன் முடிவடைகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024