Wednesday, March 11, 2020

கர்நாடகா, கோவாவுக்கு சொகுசு சுற்றுலா ரயில்

Added : மார் 10, 2020 21:41

சென்னை : இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி.,யானது, கர்நாடகா மற்றும் கோவாவுக்கு, 'கோல்டன் சாரியட்' என்ற, சொகுசு சுற்றுலா ரயிலை இயக்குகிறது.

கர்நாடகா சுற்றுலாத்துறை, 2019 ஜனவரியில், 'கோல்டன் சாரியட்' என்ற, சொகுசு சுற்றுலா ரயிலை அறிமுகம் செய்தது. இந்த ரயில் பின்னர், ஐ.ஆர்.டி.சி.டி.,யிடம் ஒப்படைக்கப்பட்டு, கர்நாடகா மற்றும் கோவாவுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இது, தென் மாநிலங்களில் உள்ள, ஒரே சொகுசு ரயிலாகும். இந்த ரயிலில் செல்லும் வகையில், வரும், 29ம் தேதி மற்றும் ஏப்., 12ம் தேதிகளில், இரு சுற்றுலாக்களை, ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு செய்துள்ளது.

ஆறு இரவுகள், ஏழு பகல்கள் உடைய சுற்றுலா, கர்நாடாகா மாநிலம், யஷ்வந்த்பூர் நிலையத்தில் இருந்து புறப்படுகிறது. இப்பயணத்தில், பந்திப்பூர் சரணாலயம், மைசூர், ஹளபேடு, சிக்மங்களூர், ஹம்பி, பதாமி, பட்டாடக்கல், ஐஹோலே, கோவா ஆகிய இடங்களை பார்த்து வரலாம். சுற்றுலாவில், ஒருவருக்கு, 2 லட்சத்து, 99 ஆயிரத்து, 130 ரூபாய் கட்டணம். இந்தியர்களுக்கு, 35 சதவீதம் கட்டண சலுகை உண்டு.

குறிப்பிட்ட நகரங்கள் வரை, இரண்டு இரவுகள், மூன்று பகல்கள் கொண்ட பயணத்துக்கு, ஒருவருக்கு, 59 ஆயிரத்து, 999 ரூபாய் கட்டணம். மேலும், தகவலுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி.,யின், சென்னை அலுவலகத்துக்கு, 82879 31970, 82879 31973 என்ற, மொபைல் போன் எண்களில், தொடர்பு கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 10.01.2025