இறுதி சடங்கு நிதிக்கு லஞ்சம் கருவூல உதவியாளர் கைது
Added : மார் 13, 2020 00:26
Added : மார் 13, 2020 00:26
ராஜபாளையம்: இறுதி சடங்கு நிதி வழங்க ரூ. 2ஆயிரம் லஞ்சம் வாங்கிய ராஜபாளையம் சார் நிலை கருவூல உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தை சேர்ந்த கருப்பசாமி மனைவி கருப்பாயி. ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய இவர் 2018 ஜூலையில் இறந்தார்.அரசு சார்பில் கிடைக்கும் இறுதி சடங்கு நிதி ரூ. 50 ஆயிரத்தை பெற கருப்பாயி மகன் கார்த்திக் பிரபு ராஜபாளையம் சார் நிலை கருவூலத்தில் மனு செய்தார்.
மனுவை உறுதிப்படுத்தி மேல் அதிகாரிகளுக்கு அனுப்புவதற்காக கருவூலத்தில் உதவியாளராக பணியாற்றும் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த இளங்கோ 55, முதற் கட்டமாக ரூ. 2 ஆயிரம், வேலை முடிந்தவுடன் மேலும் ரூ.2 ஆயிரம் தர வேண்டும், என கேட்டுள்ளார்.கார்த்திக்பிரபு புகாரின்படி விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி ரூ. 2 ஆயிரத்தை அளித்த போது இளங்கோவை டி.எஸ்.பி., சத்தியசீலன், இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், விமலா உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment