Saturday, March 14, 2020

பொருள் வாங்காத ரேஷன் கார்டு சர்க்கரை வகையாக மாற்ற முடிவு

Added : மார் 13, 2020 23:06

எந்தப் பொருளும் வாங்காத, 50 ஆயிரம் ரேஷன் கார்டுகளை, சர்க்கரை கார்டுகளாக வகை மாற்றம் செய்ய, உணவுத்துறை முடிவு செய்துள்ளது.

இலவச திட்டம்தமிழகத்தில், 2.06 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில், 50 ஆயிரம் கார்டுகள் எந்த பொருளும் வாங்காதவை. அவர்களுக்கு, ரேஷன் கடைகளில், அரிசி உட்பட, எந்த பொருட்களும் வழங்கப்படுவதில்லை. மற்ற அரிசி, சர்க்கரை கார்டுகளுக்கு, இலவச அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களுடன், பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளிட்ட, தமிழக அரசின் இலவச திட்ட பொருட்களும் வழங்கப்படுகின்றன. இதனால், எந்த பொருளும் வாங்காத கார்டுதாரர்கள், தங்களின் கார்டுகளை, அரிசி அல்லது சர்க்கரை கார்டுகளாக வகை மாற்றம் செய்து தருமாறு, அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

விரைவில், நகர்ப்புற பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில், 2021ல், சட்டசபை தேர்தலும் நடக்க உள்ளது. கோரிக்கைஇதனால், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில், அரசு பல திட்டங்களை அறிவித்து வருகிறது. இதையடுத்து, எந்த பொருளும் வாங்காத கார்டுகளையும், சர்க்கரை கார்டுகளாக மாற்ற, உணவுத்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு, வரும், 19ம் தேதி, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கையின் போது வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment

NEWS TODAY 15.12.2025