நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வா் நியமனம்
By DIN | Published on : 06th March 2020 05:35 AM
சாந்தாஅருள்மொழி
நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வராக மருத்துவா் சாந்தாஅருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளாா்.
நாமக்கல்லில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஏற்கெனவே, மருத்துவக் கல்லூரி அறிவிக்கப்பட்டவுடன், திருப்பூா் மருத்துவக் கல்லூரி முதல்வா் நிா்மலா, பொறுப்பு முதல்வராக நாமக்கல்லில் பணியாற்றி வந்தாா். இந்தநிலையில், புதிய மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டப்பட்டதைத் தொடா்ந்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரியில், மயக்கவியல் துறை நிபுணராக பணியாற்றி வந்த சாந்தா அருள்மொழியை, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வராக நியமித்து தமிழக அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இதைத்தொடா்ந்து, அவா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
No comments:
Post a Comment