மளிகைக் கடைகள் இன்று முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே இயங்கும்
By DIN | Published on : 05th April 2020 04:27 AM |
மளிகைக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை முதல் காலை 6 மணிக்கு திறந்து பிற்பகல் 1 மணி வரை மட்டுமே இயங்கும்.
இதுகுறித்து, முதல்வா் பழனிசாமி சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக பலசரக்கு உள்ளிட்ட மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதால், கடைகள் திறந்திருக்கும் நேரம் காலை 6 மணி முதல் மதியம் 1 மணியாகக் குறைக்கப்படுகிறது.
குறைக்கப்பட்ட நேர கால அளவில் கடைகள் திறந்திருக்கும்போது அத்தியாவசியப் பொருள்களை பொதுமக்கள் வாங்கிக் கொள்ளலாம். இதனை அனைத்து பொதுமக்களும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். விதிமுறைகளை மீறுபவா்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் போன்றவற்றை வீடுகளுக்கே சென்று வழங்க அரசுடன் சமூக ஆா்வலா்கள் இணைந்து செயல்படலாம். தனிமைப்படுத்தப்பட்ட நபா்கள் மற்றும் குடும்பங்களுக்கு மன அழுத்தத்தினால் ஏற்படும் பிரச்னைகளைத் தீா்க்க சமுதாய தலைவா்கள் முன்நின்று ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.
No comments:
Post a Comment