Tuesday, April 7, 2020

1.75 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 1,750 கோடி ரூபாய்

Added : ஏப் 06, 2020 22:49

சென்னை : கொரோனா வைரஸ் பாதிப்பு நிவாரணமாக, 1.75 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, நேற்று வரை, 1,750 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

07.04.2020

தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதையடுத்து, தமிழக அரசு, 2.01 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, கொரோனா பாதிப்பு நிவாரணமாக, தலா, 1,000 ரூபாயும்; இம்மாதத்திற்கு உரிய அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவை இலவசமாக வழங்குவதாகவும் அறிவித்தது. இவை, ரேஷன் கடைகள் வாயிலாக, கார்டுதாரர்களுக்கு வழங்கும் பணி, இம்மாதம், 2ம் தேதி துவங்கியது.

கடைகளில், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், பணத்தை வாங்க கூட்டமாக சேர்ந்தனர். மேலும், ஒரே சமயத்தில், 500 ரூபாய் நோட்டுக்களை எண்ணி தருவதிலும், பொருட்கள் எடை போட்டு வழங்குவதிலும், ரேஷன் ஊழியர்கள் சிரமப்பட்டனர்.இதையடுத்து, 4ம் தேதி முதல், ரேஷன் கடைகளுக்கு பதில், கார்டுதாரர்களின் வீடுகளில், 1,000 ரூபாய் வழங்கும் பணியில், ரேஷன் ஊழியர்கள் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை, 1.75 கோடி கார்டுதாரர்களுக்கு, 1,750 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில், இன்று முதல், ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.கடைகளில், கூட்டம் சேரக்கூடாது என்பதற்காக, எந்த தேதிக்கு, கடைகளுக்கு வர வேண்டும் என்ற டோக்கன், பணம் வழங்கும் போதே, கார்டுதாரர்களிடம் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், நிவாரண தொகை வாங்காதவர்களுக்கு, இன்று முதல் வரும், 30ம் தேதி வரை, கடைகளில் வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024