Tuesday, April 7, 2020

ஏப்.,14க்கு பின் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

Updated : ஏப் 06, 2020 21:54 | Added : ஏப் 06, 2020 21:48 


புதுடில்லி: நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு நீ்ட்டிப்பு குறித்து அரசு முடிவு எடுக்கும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் நடந்தது. இக்கூட்டத்துக்கு பின், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது: கொரோனா பரவலை தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. மத்திய அரசு கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து கவனித்து வருகிறது.

தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. நாட்டின் நலனை கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும். எந்த முடிவு எடுக்கப்பட்டாலும் அது மக்களின் நலன் மற்றும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டே அரசு முடிவெடுக்கும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த, திறமையான அதிகாரிகள் குழு போராடி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024