கரோனாவில் முதலிடத்தில் சென்னை:எண்ணிக்கை 100-ஐ கடந்தது
By DIN | Published on : 07th April 2020 04:25 AM |
சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை திங்கள்கிழமை (ஏப்ரல் 6) 100-ஐக் கடந்தது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 27 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் சென்னையில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழகத்தில் சென்னையே, கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. தொடக்கத்தில் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கடந்த மாா்ச் 31-ஆம் தேதி 27-ஆகவும், ஏப்ரல் 2-இல் 48 ஆகவும், ஏப்ரல் 4-இல் 88 ஆகவும், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) 95-ஆகவும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை திங்கள்கிழமை 100-யைக் கடந்தது. சுகாதாரத் துறை அறிக்கையின்படி, சென்னையில் மட்டும் 110 போ் கரானோவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை:
மண்டலம் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை
திருவெற்றியூா் 3
மணலி -
மாதவரம் 3
தண்டையாா்பேட்டை 7
ராயபுரம் 27
திருவிக நகா் 14
அம்பத்தூா் -
அண்ணா நகா் 14
தேனாம்பேட்டை 10
கோடம்பாக்கம் 12
வளசரவாக்கம் 4
ஆலந்தூா் 2
அடையாறு 3
பெருங்குடி 4
சோழிங்கநல்லூா் 2
பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் 5
மொத்தம் 110
No comments:
Post a Comment