சுற்றுலா சென்ற 350 பேர் மலேஷியாவில் தவிப்பு
Added : ஏப் 06, 2020 23:26
சென்னை : மலேஷியாவில் சிக்கியுள்ள, 350 பேர், இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர், எம்.ஞானசேகர் தாக்கல் செய்த மனு:மலேஷியாவில் இருந்து, என் கட்சிக்காரர் முல்லைநாதன் என்பவர், தொலைபேசியில் பேசினார். சுற்றுலா விசாவில், மலேஷியா சென்றதாகவும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கையால், இந்தியா திரும்ப முடியவில்லை என்றும் தெரிவித்தார். இந்தியாவில் பல பகுதிகளில் இருந்து, மலேஷியா சென்ற, 350 பேர், கோலாலம்பூரில் நிர்கதியாக உள்ளனர். விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டதால், எங்கும் செல்ல முடியவில்லை.
இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்கும்படி, அங்குள்ள துாதரக அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர்.அவர்களின் கோரிக்கைக்கு, எந்த பதிலும் இல்லை. அதனால், வெளிநாட்டில் தவிக்கும் இந்தியர்கள், நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கும்படி, அவர் கேட்டுக் கொண்டார். ஈரானில் சிலர் சிக்கிய போது, அவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கும்படி, உச்ச நீதிமன்றத்தை அணுகினர். உச்ச நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தது. மலேஷியாவில் சிக்கி தவிப்பர்களை மீட்க, இந்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தற்போது, அவர்களின் விசாவும் முடிந்து விட்டது.
அதனால், வெளிநாட்டில் இருக்க அனுமதிக்க மாட்டார்கள். மன உளைச்சலில், அவர்கள் உள்ளனர். எனவே, மலேஷியாவில் சிக்கி தவிப்பவர்கள், இந்தியா திரும்ப, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment