Tuesday, April 7, 2020

கல்லுாரி, கட்சி அலுவலகம்

Added : ஏப் 06, 2020 22:55

சென்னை : 'கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தன் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லுாரி மற்றும் கட்சி தலைமை அலுவலகத்தை அரசு பயன்படுத்திக் கொள்ளலாம்' என, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:கொரோனாவுக்கு எதிராக, மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, தே.மு.தி.க., ஆதரவு தெரிவித்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லுாரியையும், சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தையும், அரசு பயன்படுத்தி கொள்ள வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அந்தந்த வார்டுகளில் வசிக்கும், தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும், அத்தியாவசிய பொருட்களாக உணவு, காய்கறிகள், உடை, மருந்து, முக கவசம் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்க வேண்டும்.

துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும். ஊரடங்கு உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள, ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களின் குடும்பத்தினர் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும், தினக்கூலி தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் இயன்ற உதவிகளை, கட்சியினர் செய்ய வேண்டும்.இவ்வாறு, விஜயகாந்த் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024