Monday, April 6, 2020

ஒரு மாத சம்பளம் ஊக்கத்தொகை அரசு அலுவலர்கள் கோரிக்கை

Added : ஏப் 06, 2020 00:36

சென்னை : 'அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வழங்குவது போல, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற துறை பணியாளர்களுக்கும், ஒரு மாத சம்பளத்தை, ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கத் தலைவர், சண்முகராஜன் அறிக்கை:பொது சுகாதாரத் துறையுடன் இணைந்து, சமூக நலத்துறையில் பணிபுரியும், அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு, உயிர் காக்கும் பாதுகாப்பு சாதனங்களான, முகக் கவசங்கள், கையுறைகள், முழு அங்கி, நோய் தொற்று தடுக்கும் கிருமி நாசினிகள் போன்றவை வழங்க, வழிவகை செய்ய வேண்டும்.அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், சிக்கன மற்றும் நாணய கூட்டுறவு சங்கங்களில் பெற்றுள்ள, கடன் தவணை தொகையை செலுத்த, மூன்று மாதங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்; அதற்கான வட்டித் தொகையை, ரத்து செய்ய வேண்டும்.

அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு, ஒரு மாத சம்பளத்தை ஊக்கத் தொகையாக வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.அதேபோல், சுகாதாரத்துறை பணியாளர்கள், காவல், கூட்டுறவு, ரேஷன், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், உள்ளாட்சி, சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் ஆகியோருக்கும், ஒரு மாத சம்பளத்தை, ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024