Wednesday, April 8, 2020

ரேஷன் அரிசி தரம் குறைவா? வதந்தி பரப்பினால் நடவடிக்கை

Added : ஏப் 07, 2020 23:24

சென்னை : 'ரேஷன் அரிசியின் தரம் குறித்து, வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, உணவு துறை எச்சரித்துள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கு, குடும்பத்தில், நான்கு உறுப்பினர் இருந்தால் மாதம், 20 கிலோவும்; அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும், கூடுதலாக, 5 கிலோவும், இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது.புகார்ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், பிற மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு, அரிசி, மளிகை உள்ளிட்ட, அத்தியாவசிய பொருட்களின் வரத்து பாதித்துள்ளது.இதனால், ரேஷன் பொருட்களுக்கு தேவை அதிகரித்துள்ளது.

இந்த சூழலில், ரேஷன் பொருட்கள் தரமற்று இருப்பதாக புகார்கள் எழுகின்றன. இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷனில் வழங்கப்படும், அரிசி, கோதுமை, இந்திய உணவு கழகத்திடம் இருந்து வாங்கப்படுகிறது. தற்போது, எந்த கடைக்கு, எந்த கிடங்கில் இருந்து, எங்கிருந்த வந்த அரிசி உள்ளிட்ட பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளன என்ற, விபரம் கண்டறிய முடியும். ஊரடங்கு காரண மாக, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள சூழலில், மார்ச் வரை, ரேஷன் பொருட்களை வாங்காதவர்களும், தற்போது வாங்குகின்றனர்.

அதிக விலைசிலர், ரேஷன் அரிசி தரமற்று இருப்பதாகவும், அவை தொடர்பாக சில புகைப்படங்களையும், சமூக வளைதளங்களில் பதிவிட்டு, வதந்தி பரப்பி வருகின்றனர். இது, ஏழை மக்களை, வெளிச்சந்தையில், அதிக விலைக்கு அரிசி வாங்க துாண்டும் செயலாக கருதப்படுகிறது. ரேஷன் கடையில், அரிசி வழங்கும் போதே, அதன் தரத்தை அறியலாம். அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் தரமற்று இருந்தால் அவற்றை வாங்காமல், உடனே, கடைகளில் எழுதி வைக்கப்பட்டுள்ள, அதிகாரிகளின், மொபைல் போன் எண்ணில் புகார் அளிக்கலாம்.அதை செய்யாமல், ரேஷன் பொருட்கள் தரமற்று இருப்பதாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024