Wednesday, April 8, 2020


ரேஷன் நிவாரணம் வேண்டாம்

Added : ஏப் 08, 2020 00:34

சென்னை : ரேஷனில் வழங்கப் படும், 1,000 ரூபாய் மற்றும் இலவச உணவு பொருட்களை, 1,200 ரேஷன் கார்டுதாரர்கள் மட்டுமே, தங்களுக்கு வேண்டாம் என, தமிழக அரசுக்கு விட்டுக் கொடுத்துள்ளனர். 

தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இலவசம்இதனால், 2.01 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தமிழக அரசின் சார்பில், தலா, 1,000 ரூபாய் மற்றும் இம்மாதத்திற்கு உரிய அரிசி, சர்க்கரை உள்ளிட்ட, ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.அரிசி கார்டு வைத்துஇருக்கும் பலர், ரேஷன் பொருட்களை வாங்குவதில்லை. இதனால், அவற்றை கடை ஊழியர்கள், அவர்களுக்கு வழங்கியது போல பதிவு செய்து, கள்ளச்சந்தையில் விற்கின்றனர்.

இதேபோல, கொரோனா வைரஸ் பாதிப்பு நிவாரண தொகை வழங்குவதில் முறைகேடு செய்யாமல் இருக்க, 1,000 ரூபாய் மற்றும் ரேஷன் பொருட்களை வாங்க விரும்பாதவர்கள், அவற்றை அரசுக்கு விட்டு கொடுக்கலாம் என, உணவு துறை அறிவித்தது. இணையதளம் அதன்படி, உணவு வழங்கல் துறையின், பொது வினியோக திட்ட இணையதளம் அல்லது மொபைல் போன் செயலி வாயிலாக, நிவாரணத்தை விட்டு கொடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது. நேற்று வரை, 1.90 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், 1,200 கார்டுதாரர்கள் மட்டுமே, தங்களுக்கு நிவாரண தொகை மற்றும் பொருட்கள் வேண்டாம் என, அரசுக்கு விட்டுக் கொடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock Deputy Chief Minister Udhayanidhi Stalin and Health Min...