ஆந்திரா கிளம்பிய 'அனகோண்டா' ரயில்
Added : ஏப் 23, 2020 01:44
ஈரோடு:ஈரோடில் இருந்து, ஆந்திரா மாநிலம், விஜயவாடா நோக்கி. 2 கி.மீ., நீளமுள்ள, 'அனகோண்டா' சரக்கு ரயில் நேற்று காலை புறப்பட்டது.
ஈரோடில் இருந்து நேற்று காலை, 7:00 மணிக்கு விஜயவாடா நோக்கி, 126 பெட்டிகள் கொண்ட அனகோண்டா சரக்கு ரயில் புறப்பட்டது. 42 பெட்டிகளுக்கு, ஒன்று என்ற விதத்தில், நான்கு இன்ஜின்கள் இணைக்கப்பட்டிருந்தன.ஈரோடுக்கு பல்வேறு சரக்குகளை ஏற்றி வந்த இந்த ரயில்கள், அவற்றை இறக்கிய பின், காலி பெட்டிகள் இணைக்கப்பட்டு, ஒரே ரயிலாக மாற்றி இயக்கப்பட்டது.
இந்த ரயில், 2 கி.மீ., நீளம் இருந்தது. நான்கு டிரைவர்கள், நான்கு உதவி டிரைவர்கள், ஒரு கார்டு பணியில் இருந்தனர்.தெற்கு ரயில்வே வரலாற்றில், 2 கி.மீ., நீள சரக்கு ரயில் செல்வது இதுவே முதல் முறை.
No comments:
Post a Comment