Sunday, April 26, 2020

வங்கிகளுக்கு அறிவுரை

Added : ஏப் 26, 2020 03:31

சென்னை:சென்னை உட்பட, ஐந்து மாநகராட்சிகளில், முழு ஊரடங்கு அமலின் போது, வங்கிக் கிளைகளில், 33 சதவீத ஊழியர்கள் பணியில் இருப்பதை, சம்பந்தப்பட்ட வங்கிகள் உறுதிப்படுத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அனைத்து வங்கிகளுக்கும், தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை: சென்னை, மதுரை மற்றும் கோவை மாநகராட்சிகளில், இன்று முதல், 29ம் தேதி வரை; சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில், 28ம் தேதி வரையும், முழு ஊரடங்கு அமல்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக, ஐந்து மாநகராட்சிகளில், 33 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே, வங்கிகள் செயல்பட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, அரசின் உத்தரவிற்கேற்ப, அனைத்து வங்கி கிளைகளிலும், 33 சதவீத ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணிக்கு வர, சம்பந்தப்பட்ட வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025