சேலத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற தவறும் மக்கள்
சேலம் சின்னக்கடை வீதியில் காய்கறி, மளிகைப் பொருட்களை வாங்க திரண்ட பொதுமக்கள். படம்: வி.சீனிவாசன்
சேலத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக் காமல், காய்கறி, மளிகைப் பொருட்களை வாங்கிச் செல்லும் நிலையுள்ளது.
கரோனா வைரஸ் தாக்கத் தில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என அரசு அறிவித் துள்ளது. ஆனால், பொதுமக்கள் இறைச்சிக் கடைகள், மளிகை மற்றும் காய்கறி கடைகளுக்கு திரளாக வந்து செல்வதையே கடைபிடித்து வருகின்றனர்.
குறிப்பாக, தினந்தோறும் காலை 6 மணி முதல் 9.30 மணி வரை சேலத்தின் முக்கிய கடை வீதியான சின்னக்கடை வீதியில் மக்கள் பொருட்களை வாங்கிச் செல்ல, திரளாக வந்து செல்கின்றனர். இதனால், கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
அனைவரும் ஒரு மீட்டர் சமூக இடைவெளியில் நின்று பொருட்களை வாங்க வேண் டும் என அறிவுறுத்தப்பட்டுள் ளது. ஆனால், மக்கள் வழக்கம் போல, மிக நெருக்கமாகவே கடைகளில் நின்று பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
பொதுமக்களின் இந்த நடவடிக்கையால் கரோனா தொற்று, சமூக தொற்றாக மாறும் அபாயம் அதிகரித்து வரு கிறது. எனவே, சமூக இடை வெளியை கடைபிடிக்காதவர் கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
No comments:
Post a Comment