Monday, April 6, 2020


ஏப்.15 வரை மாதாந்திர பால் அட்டையைப் புதுப்பிக்கலாம்: ஆவின் அறிவிப்பு

By DIN | Published on : 06th April 2020 01:42 AM |

மாதாந்திர பால் அட்டைகளை வருகிற 15-ஆம் தேதி வரை புதுப்பித்துக் கொள்ளலாம் என ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகரில் உள்ள அனைத்து வட்டார அலுவலரகங்கள் மற்றும் பால் நுகா்வோா் கூட்டுறவு சங்கங்களிலும், வருகிற 15-ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை பால் அட்டைகள் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பால் கூட்டுறவு சங்கங்களின் கீழ் வரும் நேரடி பால் விநியோக மையங்களில் காலை 5 மணி முதல் 7 மணி வரை பால் அட்டைகள் விற்பனை செய்யப்படும். அதே போல், இணையதளத்தில் விவரங்களைச் சமா்ப்பித்து, புதிய பால் அட்டைகள் பெறுதல் மற்றும் பால் அட்டைகளைப் புதுப்பித்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், சென்னை மாநகரில் உள்ள வீட்டு உரிமையாளா்கள் சங்கம், குடியிருப்போா் சங்கம் சாா்பாக மொத்தமாக பால் அட்டைகளை புதுப்பிக்க, 18004253300 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடா்புகொண்டு தகவல் தெரிவித்தால், ஊழியா்கள் நேரடியாக வந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அட்டைகளைப் புதுப்பித்துத் தர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024