Monday, April 6, 2020

ருசியாக சாப்பிடுவதுதான் முக்கியம்! பொறுப்பில்லாத சிலரால் கொரோனா கொண்டாட்டம்

Updated : ஏப் 06, 2020 06:58 |

கோவை:சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், குளத்து மீன்களை வாங்க முத்தண்ணன் குளக்கரையில் திரண்டனர் மீன் பிரியர்கள். சிறிதும் பொறுப்பில்லாத இது போன்ற நபர்களால், கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது சிரமமாகி வருகிறது.ஞாயிற்றுக்கிழமையில் அசைவம் சாப்பிடாமல், கோவை மக்களால் இருக்க முடியாது போலிருக்கிறது.

மீனைத்தேடி நகரில் வலம் வந்தனர் மீன் பிரியர்கள். தடாகம் சாலையிலுள்ள முத்தண்ணன் குளக்கரையில், ஏராளமானோர் திரண்டனர்.குளக்கரையில் பைக்குகள், ஸ்கூட்டர்கள் என்று ஏராளமான வாகனங்கள் வரிசை கட்டி நிற்க, கரையே இடைவெளி இல்லாமல் நிரம்பி நின்றது.மீனை வாங்கி, சுத்தம் செய்து வாங்கிச் செல்லும் வரை, ஒருவரும் சமூக இடைவெளி பற்றி கவலைப்படாமல், எப்போதும் போல், உரசியபடி நின்றனர். சிலர் மட்டுமே முகக்கவசம் அணிந்திருந்தனர்.இதே நிலை, நேற்று பிற்பகல் வரை நீடித்தது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, சுகாதார பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள், டாக்டர்கள், நர்சுகள், போலீசார், வருவாய் துறை அலுவலர்கள் என அனைவரும் உயிரை கையில் பிடித்தபடி சிரமப்படுகின்றனர்.இது எதையும் புரிந்து கொள்ளாமல், ருசிக்கு அடிமையான பொதுமக்களில் சிலர், இப்படி பொறுப்பற்று நடந்து கொள்கின்றனர்.ஆனால், நகரில் வேறு சில பகுதிகளில், சமூக இடைவெளி விட்டு, மீன், இறைச்சி வாங்கிச் சென்றதை மறுக்க முடியாது.மக்கள் ஒட்டுமொத்தமாக வெளியே வருவதை தடுக்க, இறைச்சி, மீன் விற்பனைக்கு முற்றிலும் தடை விதிப்பதே சரி. முன்வருமா மாவட்ட நிர்வாகம்?

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024