Tuesday, April 7, 2020

லண்டனுக்கு சிறப்பு விமானம்:ஏர் இந்தியா முடிவு

Updated : ஏப் 06, 2020 21:56 | Added : ஏப் 06, 2020 21:55 

புதுடில்லி: ஊரடங்கு உத்தரவால் இந்தியாவில் சிக்கி தவிக்கும் கனடா நாட்டவர்களை திருப்பி அனுப்பும் வகையில் சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா இயக்க உள்ளது.


கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் வரும் 14ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கு உத்தரவால் வெளிநாட்டவர்கள் பலர் தங்கள் நாட்டிற்கு திரும்பி செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் ஏர் இந்தியா சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது.

கடந்த சில வாரங்களில் இந்தியாவில் சிக்கி தவித்த இஸ்ரேல் மற்றும் ஜெர்மனியர்களை அவர்களின் நாட்டிற்கு சிறப்பு விமானங்களை இயக்கியது.

இந்நிலையில் கனடா நாட்டவருக்கும் அவர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பிசெல்ல சிறப்பு விமானங்களை இயக்க ஏர் இந்தியா முடி வு செய்துள்ளது. இதன் படி வரும் 8 ம் தேதி முதல் 10 ம் தேதி வரை கனடா பயணிகளை ஏற்றிச் செல்ல உள்ளது. முதல் விமானம் 8 ம் தேதி டில்லியில் இருந்து புறப்பட்டு லண்டனுக்கு சென்று சேருகிறது.

9-ம் தேதி புறப்படும் விமானம் மும்பையில் இருந்து லண்டனுக்கு புறப்படுகிறது. 10 ம் தேதி புறப்படும் விமானம் டில்லியில் இருந்து லண்டனுக்கு இயக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024