ஜப்பானில் இன்று முதல் அவசர நிலை பிரகடனம்?
Updated : ஏப் 07, 2020 06:52 | Added : ஏப் 07, 2020 06:50
டோக்கியோ: ஜப்பானில் இன்று(ஏப்.,7) முதல் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், இதுவரை 209 நாடுகளுக்கு பரவி உயிர்பலி வாங்கி வருகிறது. உலகளவில் கொரோனாவால் 13,46,003 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 74,654 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து 2,78,445 பேர் சிகிச்சைக்கு பின் மீண்டுள்ளனர்.
ஜப்பானில் கடந்த 24 மணி நேரத்தில் 252 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,906 ஆக உயர்ந்தது. இதுவரை 92 பேர் அங்கு பலியாகி உள்ளனர். 592 பேர் மீண்டுள்ளனர்.
இந்நிலையில், 55.9 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஜப்பானில், இன்று முதல் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டோக்கியோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்ததை அடுத்த, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவசர நிலை அடுத்த 6 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதிபர் ஷின்சோ அபே 1 மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என கூறி உள்ளார்.
இதுகுறித்து ஜப்பான் அதிபர் ஷின்சோ அபே கூறுகையில், 'ஏப்., 7 முதல் ஜப்பானில் தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்ய முடிவு செய்துள்ளேன். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை போல் இங்கு ஊரடங்கு கடுமை காட்டப்படாது. ஊரடங்கு காலத்திலும், மாகாண எல்லைகள் திறந்திருக்கும். மே 6 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஜப்பானில் வணிக நிறுவனங்கள், காபி ஷாப்கள் போன்றவை தாமாக முன்வந்து விற்பனையை நிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment