Wednesday, April 8, 2020

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? எதிர்க்கட்சி தலைவர்களுடன் இன்று மோடி ஆலோசனை
Updated : ஏப் 08, 2020 07:51 | Added : ஏப் 08, 2020 07:15

புதுடில்லி: கொரோனா தடுப்பு குறித்து இன்று (ஏப்.,8) எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். அப்போது, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இன்று (ஏப்.,8 ம் தேதி) பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுடன் காலை 11 மணியளவில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக உரையாடுகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பார்லிமென்ட்டின் லோக்சபா, ராஜ்யசபா என இரு சபைகளிலும் 5க்கும் மேற்பட்ட எம்.பி.க்களை கொண்ட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தின் போது கொரோனா பாதிப்பிலிருந்து விடுபடவும், தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து கட்சி தலைவர்களின் கருத்துக்களை கேட்க உள்ளார். ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்படலாம் எனக்கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024