'வாட்ஸ் ஆப்'பில் புதிய கட்டுப்பாடு
Added : ஏப் 08, 2020 01:23
புதுடில்லி : பொய் செய்திகள் பரவுவதை தடுக்கும் வகையில், 'வாட்ஸ் ஆப்' சமூக வலை தளத்தில், புதிய கட்டுப்பாடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப் சமூக வலை தளத்தை, இந்தியாவில், 40 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். தற்போது, முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால், பெரும்பாலானோர், வீடுகளில் முடங்கியுள்ளனர்.இந்த நிலையில், தங்களுடைய உறவினர்கள், நண்பர்கள் என, பலருடனும், சமூக வலை தளம் மூலமே, மக்கள் தொடர்பில் உள்ளனர்.மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள சிறந்த சாதனமான சமூக வலை தளத்தில், பலரும் பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால், அது தெரியாமல், பயனாளிகள் பலர், அதை மற்றவர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இவ்வாறு பொய் செய்தி வேகமாக பரவி வருகிறது.
கொரோனா குறித்தும், ஊரடங்கு உத்தரவு குறித்தும், இவ்வாறு பல பொய் செய்திகள், வாட்ஸ் ஆப் சமூக வலை தளத்தில் உலா வருகின்றன. அதையடுத்து, வாட்ஸ்ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை அறிமுகம் செய்துள்ளது.அதன்படி, அதிக அளவில் 'பார்வர்டு' எனப்படும் மற்றவர் நமக்கு அனுப்பும் செய்தியை, ஒரு நேரத்தில், ஒருவருக்கு மட்டுமே நாம் அனுப்ப முடியும்.'இந்தக் கட்டுப்பாட்டால், பொய் செய்திகள் பரவுவது கட்டுப்படுத்தப்படும்' என, வாட்ஸ்ஆப் நிறுவனம் கூறியுள்ளது.

No comments:
Post a Comment