Tuesday, June 9, 2020

தடுப்பு மருந்து கண்டறியும் வரை பள்ளி திறப்பு இல்லை: பிலிப்பைன்ஸ் அதிரடி


தடுப்பு மருந்து கண்டறியும் வரை பள்ளி திறப்பு இல்லை: பிலிப்பைன்ஸ் அதிரடி

Updated : ஜூன் 09, 2020 14:19 | Added : ஜூன் 09, 2020 14:18 

மணிலா: கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை பள்ளிகள் திறப்பு இல்லை என்று பிலிப்பைன்ஸ் நாடு அறிவித்துள்ளது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. ஊரடங்கு பிறப்பித்து பல நாடுகள், பல நாட்களாக நீட்டித்து வருகின்றன. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக உலகம் முழுவதும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. இதற்கிடையே கொரோனா வைரசிற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க கடந்த 6 மாதத்திற்கும் மேலாக பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வந்தாலும், இதுவரையில் அதிகாரப்பூர்வமாக எந்த நாடும் தடுப்பூசியை கண்டுபிடிக்கவில்லை.

இந்நிலையில், கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, அமலுக்கு வரும் வரையில் பள்ளிகள் திறக்கப்படாது என பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிலிப்பைன்ஸ் கல்வித்துறை செயலர் லியோனர் பிரியோனஸ் கூறுகையில், ‛கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை பள்ளிகள் திறப்பு இருக்காது. தனிமனித இடைவெளியுடன் குழந்தைகளைப் பள்ளியில் உட்கார வைக்க உடன்பாடு இல்லை. குழந்தைகள் தங்கள் நண்பர்களை நெருங்கும் போது நிச்சயமாக தொற்று பரவும்.

ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி வழிக்கற்பித்தல் வகுப்புகள் தொடங்கும். ஆனாலும், வறுமையான மற்றும் இணைய இணைப்பு இல்லாத தொலைதூர சமூகத்தை சேர்ந்த குழந்தைகளின் கல்வி குறித்துக் கவலை எழுகிறது. இவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து யோசித்து வருகிறோம்,' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024