மதுரை:மருத்துவப் படிப்பில் சீட் நிராகரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவருக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் செலவு தொகை வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
15.01.2021
மதுரை வில்லாபுரம் அருண்குமார் தாக்கல் செய்த மனு: மாற்றுத்திறனாளியான நான் 2018-19 ல் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வில் 140 மதிப்பெண் பெற்றேன். மாற்றுத்திறனாளி என்பதை அரசு டாக்டர்கள் குழு உறுதி செய்து சான்றளித்துள்ளது. அந்த ஆண்டு மாணவர் சேர்க்கை முடிந்ததால், 2019-20 கல்வியாண்டில் எனது பெயரை பரிசீலிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பரிசீலிக்கவில்லை. எனக்கு இடம் ஒதுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அருண்குமார் குறிப்பிட்டார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.அரசுத் தரப்பு, '2020-21 கல்வியாண்டிற்குரிய அனைத்து இடங்களும் பூர்த்தியாகிவிட்டன,' என தெரிவித்தது.நீதிபதி: மனுதாரர் மாற்றுத்திறனாளி என்பதில் சந்தேகம் இல்லை. அவரைவிட குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் மாற்றுத்திறனாளி களுக்குரிய ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்.,படிப்பில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மனுதாரர் தகுதியான மாணவர்தான். அவருக்கு 2021-22 ல் இடம் ஒதுக்க உத்தரவிட முடியாது. 2020-21ல் காலி இடம் ஏற்படும்பட்சத்தில் அதில் நிரப்புமாறு நிவாரணம் அளிக்க முடியாது.2018-19 ல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மனுதாரருக்கு தன்னிச்சையாக, நியாயமற்ற முறையில் இடம் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் மூன்று முறை நீதிமன்றத்தை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
எதிர்மனுதாரர்களான சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவக் கல்வி இயக்குனர் மற்றும் தேர்வுக்குழு செயலாளர் மீது தான் குறைபாடு உள்ளது.மனுதாரருக்கு ரூ.2 லட்சம் செலவு தொகையை சுகாதாரத்துறை செயலாளர் வழங்க வேண்டும். அத்தொகையை மனுதாரர் பயன்படுத்தி பயிற்சி பெற்று, அடுத்த கல்வியாண்டில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார்.
No comments:
Post a Comment