Monday, January 11, 2021

பிறந்த ஆண்டு பிரச்னையால் வேலை மறுப்பு


பிறந்த ஆண்டு பிரச்னையால் வேலை மறுப்பு

Added : ஜன 10, 2021 02:35

சென்னை:பிறந்த ஆண்டு வேறுபாட்டால், நடத்துனர் பணி மறுக்கப்பட்டவருக்கு, வேலை வழங்க பரிசீலிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு போக்கு வரத்து கழகத்தின், வேலுார் மண்டலத்திற்கான நடத்துனர் பணிக்கு, நாராயணன் என்பவரை, 2007ல், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரை செய்தது.சான்றிதழ் சரிபார்ப்பின் போது, பள்ளி மதிப்பெண் சான்றிதழில், அவரது பிறந்த ஆண்டு, 1965 என்றும், மாற்றுச் சான்றிதழில், 1967 என்றும் குறிப்பிட்டிருந்தது கண்டறியப்பட்டது.

கழிந்துவிட்டது

அந்த வேறுபாட்டை காரணம் காட்டி,அவருக்கு வேலை வழங்க,போக்குவரத்து கழகம் மறுத்தது. இதை எதிர்த்து, 2008ல் நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

வழக்கு விசாரணை நிலுவையில் இருந்த நிலையில், பள்ளி கல்வித் துறையை அணுகிய நாராயணன், பிறந்த ஆண்டை, 1967 என, மாற்றம் செய்து, புதிதாக மதிப்பெண் சான்றிதழ் பெற்று, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.இந்த வழக்கு, 13 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. அதை தொடர்ந்து, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன், வழக்கு விசாரணைக்கு வந்தது.

போக்குவரத்து கழகம் சார்பில், மனுதாரருக்கு, 53 வயது ஆகி விட்டதால், நடத்துனர் பணிக்கான வயது வரம்பை கடந்து விட்டதாக கூறி, பணி வழங்க முடியாது என, விளக்கம் அளிக்கப்பட்டது. பின், வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:

ஒரு சிறிய தவறால், மனுதாரருக்கு தகுதியிருந்தும், வேலையை பெற முடியவில்லை. 10 ஆண்டுகளுக்கு மேல் கழிந்து விட்டது. தற்போது,மனுதாரருக்கு வயது, 53. பணி ஓய்வுபெறும் வயது, 58. விருப்பம்போக்குவரத்து கழகம் சார்பில், ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டாலும், மனுதாரர் மீது குறைகூற முடியாது. ஏனென்றால், அதிக வழக்குகள் காரணமாக, இந்த வழக்கை முடிவு செய்ய, 10 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது.

மனுதாரரை பொறுத்தவரை குறித்த நேரத்தில், நீதிமன்றத்தை அணுகியுள்ளார். ஒரு சிறிய தவறு, வாழ்க்கை பாதையை மாற்றி விடும். அதற்கு, இந்த வழக்கு ஒரு உதாரணம். இத்தனை ஆண்டுகளாக, மனுதாரர் கஷ்டப்பட்டுள்ளார்.பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்டு, கல்வித் துறை செய்த தவறால், மனுதாரர் கஷ்டப்பட்டுள்ளார்.

மனுதாரரை பொறுத்த வரை, சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருப்பதை சரிபார்த்து இருக்க வேண்டும்; அதை அவரும் கவனிக்கவில்லை. எது இருந்தாலும், 13 ஆண்டுகளாக நீதிக்காக காத்திருந்துள்ளார். எனவே, நடத்துனர் பணிக்கு, இவரை போக்கு வரத்து கழகம் பரிசீலிக்க வேண்டும்.உரிய ஆவணங்களுடன் பணிபுரியும் விருப்பத்தை தெரிவித்து, போக்கு வரத்து கழகத்திற்கு, இரு வாரங்களில் மனு அனுப்ப வேண்டும்.

அதை போக்கு வரத்து கழகம், நான்கு வாரங்களில் பரிசீலித்து, தேவையானதை செய்ய வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024