Wednesday, February 3, 2021

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த 195 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த 195 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி

Added : பிப் 02, 2021 15:08 

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த 195 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 34 மருத்துவமனைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை இந்தியாவில் 39,50,156 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6,866 பேர் (கோவிஷீல்டு - 6,734, கோவாக்சின் - 132) தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். மேலும், தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எந்த தொற்றும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 34 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்ட தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மருத்துவமனைகள் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் முன்களப்பணியாளர்கள் மட்டும் இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024