Wednesday, February 10, 2021

இந்தியன் வங்கி சேவை 3 நாட்கள் பாதிப்படையும்


இந்தியன் வங்கி சேவை 3 நாட்கள் பாதிப்படையும்

Added : பிப் 09, 2021 22:40

சென்னை:இந்தியன் வங்கியுடன், அலகாபாத் வங்கி, 2020 ஏப்., 1 முதல் இணைக்கப்பட்டு, இந்தியன் வங்கியாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியன் வங்கியில், வரும் மூன்று நாட்கள், சர்வர் இணைக்கும் பணி நடைபெற இருப்பதால், வங்கி சேவையில் பாதிப்பு இருக்கும் என, வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.இந்தியன் வங்கி அனுப்பியுள்ள குறுந்தகவல்:இந்தியன் வங்கி -- அலகாபாத் வங்கிகளின், சர்வர்களை இணைக்கும் இறுதிகட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக, வரும், 12ம் தேதி, இரவு, 9:00 மணி முதல், 15ம் தேதி காலை, 9:00 மணி வரை, வங்கி சேவையில் பாதிப்பு ஏற்படும். வாடிக்கையாளர்கள்ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.பாக்ஸ்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024