Wednesday, December 1, 2021

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.29,697 கோடி


வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.29,697 கோடி

Updated : நவ 30, 2021 23:58 | Added : நவ 30, 2021 20:57 

புதுடில்லி:வங்கிகளில் நீண்ட காலம் பரிவர்த்தனை நடக்காத கணக்குகளில் வாடிக்கையாளர்களின், 29 ஆயிரத்து 697 கோடி ரூபாய் கோரப்படாமல் உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.

வாரிசுதாரர்கள்ராஜ்சபாவில் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:கடந்த 2020 டிச.,31 நிலவரப்படி வங்கிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பரிவர்த்தனை நடக்காத, 9 கோடி வாடிக்கையாளர்களின் கணக்குகளில் 29 ஆயிரத்து 697 கோடி ரூபாய் கோரப்படாமல் உள்ளது. மேலும், 64 வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஏழு ஆண்டு 'டிபாசிட்' காலம் முடிவடைந்தும், 71 லட்சம் ரூபாய் திரும்பப் பெறப்படாமல் உள்ளது. ஓராண்டுக்கு மேலாக பரிவர்த்தனை நடக்காத கணக்குகளை ஆராய்ந்து, வாடிக்கையாளர்களிடம் அதற்கான காரணங்களை கேட்கும்படி அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

மேலும், சிறப்பு முகாம்கள் வாயிலாக இரண்டு ஆண்டுகள் செயல்படாமல் உள்ள கணக்குகளில் உள்ள வாரிசுதாரர்களை தொடர்பு கொண்டு பணம் கோரப்படாமல் உள்ளது பற்றி தெரிவிக்கும்படியும் வங்கிகள் அறிவுறுத்தப்பட்டுஉள்ளன. வங்கிகள் அவற்றின் வலைதளத்தில் கோரப்படாத டிபாசிட் தொகை, 10 ஆண்டுகளாக பரிவர்த்தனை செய்யப்படாத வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி விபரங்களை வெளியிடும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு

மேலும், 10 ஆண்டுகளுக்கு மேல் கோரப்படாத தொகை டிபாசிட்தாரர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியத்தில் சேர்க்கப்படும். அதன் பின், டிபாசிட்தாரர் அல்லது வாரிசுகள் கோரினால் அந்த நிதியத்தில் இருந்து வட்டியுடன் டிபாசிட் தொகை திரும்பப் பெறப்பட்டு வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024